Skip to main content

ஆஸ்கரில் இதுவரை நடக்காத ஒன்று!!! 2019 விருது பட்டியல்

Published on 25/02/2019 | Edited on 25/02/2019
oscar


2019 ஆண்டுக்கானஆஸ்கர் விருது வழங்கும் விழா இன்று காலை லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கோலாகலமாக தொடங்கி, நடைபெற்று முடிந்துள்ளது. உலகம் முழுவதும் இந்த விருது வழங்கும் விழாவுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பும், எதிர்ப்பார்பும் உள்ளது. இன்று நடைபெற்ற இந்த நிகழ்ச்சி லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலுள்ள டால்பி  தியேட்டரில் நடைபெற்றது. ரோமா என்கிற மெக்சிக்கோ படமும், தி ஃபேவரைட் என்ற ஆங்கில படமும் தலா பத்து பரிந்துரைகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த வருடம்தான் முதன் முறையாக நெட்பிளிக்ஸில் வெளியான ரோமா திரைப்படம் ஆஸ்கருக்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. உலகம் முழுவதும் பலரிடம் நல்ல வர்வேற்பை பெற்றுள்ளதால் இந்த படத்திற்கே இந்த வருட ஆஸ்கரில் நல்ல வரவெற்பும் இருக்கும் என்று சொல்லப்பட்டது.நிகழ்ச்சியை ஒருசேர நடத்தி செல்ல தொகுப்பாளர் இல்லாததால், பிரபலங்களே தொகுத்து வழங்கி விருதுகளை அறிவித்தனர். தொடக்கத்திலேயே சர்ச்சைகளுடன் தொடங்கிய ஆஸ்கர், நிகழ்ச்சியின்போது சர்ச்சைகளை கிளப்பாமல் பரிந்துரை செய்யப்பட்ட படங்களில் எது வெற்றிபெற்றதோ அதற்கு விருதுகளை வழங்கி சிறப்பித்துள்ளது. தற்போது எந்த எந்த பிரிவுகளில் யார், எந்த படம் வெற்றிபெற்றுள்ளது என்ற முழு பட்டியலை பார்ப்போம்....
 

சிறந்த படம் - கிரீன் புக் (Green Book)

சிறந்த இயக்குனர் - அல்ஃபோன்ஸா குரான், ரோமா (Alfonso Cuaron,Roma)

சிறந்த நடிகை - ஒலிவியா கோல்மன், தி ஃபேவரைட் ( Olivia Colman, The Favourite)

சிறந்த நடிகர் - ரமி மாலிக், போஹிமியன் ராப்சோடி ( Rami Malek, Bohemian Rhapsody)

சிறந்த துணை நடிகை - ரெஜினா கிங், இஃப் பீல் ஸ்ட்ரீட் குட் டால்க் (Regina King, If Beale Street Could Talk)

சிறந்த துணை நடிகர் - மஹர்ஷலா அலி, கிரீன் புக் (Mahershala Ali, Green Book)

சிறந்த வெளிநாட்டு படம் - ரோமா, மெக்சிகோ Roma (Mexico)

சிறந்த அனிமேஷன் படம் - ஸ்பைடர் மேன்: இண்டூ தி ஸ்பைடர் வெர்ஸ் (Spider-Man: Into The Spider-Verse)

சிறந்த திரைக்கதை - கிரீன் புக் (Green Book)

சிறந்த திரைக்கதை தழுவல் - பிளாக்-க்ளான்ஸ்மேன் (BlacKkKlansman)

சிறந்த பின்னணி இசை - பிளாக் பாந்தர் (Black Panther)

சிறந்த பாடல் - ஷாலவ், அ ஸ்டார் இஸ் பார்ன் (Shallow, A Star Is Born)

சிறந்த குறு ஆவணப் படம் - பிரியட். எண்ட் ஆஃப் செண்டன்ஸ் (Period. End Of Sentence)

சிறந்த ஆவணப் படம் - ஃபிரி சோலோ (Free Solo)

சிறந்த குறும்படம் - ஸ்கின் (Skin)

சிறந்த அனிமேஷன் குறும்படம் - பாவ் (Bao)

சிறந்த ஒளிப்பதிவாளர் - அல்ஃபோன்சோ குரான், ரோமா (Alfonso Cuaron,Roma)

சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு - பிளாக் பாந்தர் (Black Panther)

சிறந்த உடை வடிவமைப்பு - பிளாக் பாந்தர் (Black Panther)

சிறந்த ஒப்பனை & சிகை அழங்காரம் - வைஸ் (Vice)

சிறந்த ஒலி தொகுப்பு - போஹிமியன் ராப்சோடி (Bohemian Rhapsody)

சிறந்த ஒலி கலவை - போஹிமியன் ராப்சோடி (Bohemian Rhapsody) 

சிறந்த வி.எஃப்.எக்ஸ் - ஃபர்ஸ்ட் மேன் (First Man)

சிறந்த படத்தொகுப்பு - போஹிமியன் ராப்சோடி (Bohemian Rhapsody)

பத்து பிரிவுகளில் பரிந்துரையான ரோமா திரைப்படம் மூன்று விருதுகளை தட்டிச் சென்றுள்ளது. இந்த திரைப்படம் நெட்பிளிக்ஸ் தயாரிப்பில் வெளியானது. மேலும் அதிகபட்சமாக போஹிமியன் ராப்சோடி என்னும் திரைப்படம் நான்கு விருதுகளை பெற்றுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்