Skip to main content

2.O படத்தில் வருவது காகம் அல்ல... ஷங்கர் சொன்ன 2.O பட சீக்ரெட்

Published on 01/10/2018 | Edited on 01/10/2018
shankar

 

 

 

லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், ஷங்கரின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம்  '2.O'. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருக்கும் இப்படத்தில் ஹிந்தி நடிகர் அக்ஷய் குமார் வில்லனாக நடித்துள்ளார். எமி ஜாக்சன் நாயகியாக நடித்துள்ளார். இந்தியாவிலேயே அதிக பஜெட்டில் சுமார் ரூ543 கோடிக்கு மேல் செலவழித்து மிக பிரமாண்டமாக உருவாகியுள்ள இப்படம் வரும் நவம்பர் 29ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று பல்வேறு சாதனைகள் புரிந்து வருகிறது. மேலும் டீசரில் நடிகர் அக்ஷய்குமார் காகமாக வருவதாகவும், படத்தில் அவருக்கு விஞ்ஞானி ரிச்சர்ட் என்ற கதாபாத்திரம் எனவும் பரவலாக பேசப்பட்டு வருகின்ற நிலையில் தற்போது இயக்குனர் ஷங்கர் இந்த தகவல்களை முற்றிலுமாக மறுத்துள்ளார். சமீபத்தில் ஒரு ஆங்கில செய்தி சேனலுக்கு  ஷங்கர் அளித்த பேட்டியில் இதுகுறித்து பேசியபோது.... டீசரில் நீங்கள் பார்த்தது காகம் அல்ல, அது வேறு ஒரு பறவை. அதே போல் அக்ஷய்குமார் விஞ்ஞானி ரிச்சர்ட் என்ற கதாபாத்திரதில் நடிக்கவில்லை. மேலும் அடுத்து நான் இயக்கும் இந்தியன் 2 படத்திற்கு பிறகு மீண்டும் ஒரு சயின்ஸ் பிக்சன் படம் எடுக்கவுள்ளேன். அதற்கு முழு ஸ்க்ரிப்ட் என்னிடம் தயாராக உள்ளது" என்று வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.   

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆர்வம் காட்டாத ரஜினி... விழாவை ரத்து செய்த லைகா ! 

Published on 08/01/2019 | Edited on 08/01/2019
2.0

 

 

ரஜினிகாந்த் - ஷங்கர் கூட்டணியில் உருவான '2.0' படம் கடந்த நவம்பர் 29ஆம் தேதி 3டி தொழில்நுட்பத்தில் வெளியாகி உலகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்று வசூல் சாதனை நிகழ்த்தியது. இப்படம் இதுவரை சுமார் ரூ.750 கோடி வசூலைத் தாண்டி இன்னமும் நன்றாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் வெற்றி விழாவை பெரிய அளவில் கொண்டாட தயாரிப்பு தரப்பு திட்டமிட்டது. ஆனால் இதில் ரஜினிகாந்த் அதிகம் ஆர்வம் காட்டாததால் ரஜினி இல்லாமல் வெற்றியை எப்படி கொண்டாடுவது என்று முடிவெடுத்து அனைத்து கொண்டாட்டத்தையும் தற்போது ரத்து செய்துள்ளது லைகா நிறுவனம்.

 

 

Next Story

ஒரே வாரத்தில் 500 கோடி வசூல் செய்த 2.0...சாதனை மேல் சாதனை படைப்பு 

Published on 06/12/2018 | Edited on 06/12/2018
2.0

 

 

 

ரஜினிகாந்த் - ஷங்கர் கூட்டணியில் சமீபத்தில் வெளியான 2.0 படம் முதல் வார வசூல் ரூ.500 கோடியை தாண்டியுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தமிழ் படங்களிலேயே அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையை இப்படம் நிகழ்த்தியுள்ளது. மேலும் அதிவேகமாக இச்சாதனையை நிகழ்த்திய படமாகவும் இது அமைந்துள்ளது. இன்னும் அடுத்தடுத்த வாரங்களில் வசூல் ரூ.1000 கோடியை விரைவில் எட்டும் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே '2.0' படம் வரும்  2019 மே மாதம் சீனாவில் பிரம்மாண்டமாக 10,000 திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

2.0