ஒரு 12ஆம் வகுப்பு வரை நன்றாக படித்த மாணவர், இன்ஜினியரிங் ஃபைனல் இயரில் 34 ஆரியர்களுடன் தவிக்கும் மாணவரின் பெற்றோர் கவுன்சிலிங்கிற்கு வருகின்றனர். பெற்றோர்கள் லோயர் மிடில் கிளாஸ் சூழ்நிலையால் வெளிநாடு அனுப்பும் கனவுடன் இன்ஜினியரிங் படிக்க வைத்திருக்கிறார்கள்.
அவரிடம் பேசியதும் முதல் செஷனிலேயே அவருக்கு இன்ஜினியரிங் மீது ஆர்வம் இல்லை என்பது தெரிந்துவிட்டது. ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், தன் பிள்ளைக்கு என்ன பிடிக்கும் என்று தெரியாமல் பெரும்பாலான பெற்றோர்கள் கவுன்சிலிங் வருகிறார்கள். ஆனால் அந்த குழந்தை தனக்கு என்ன வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறது. அந்த மாணவன் டிராயிங் சம்பந்தப்பட்ட ஒரு படிப்பு தான் படிக்க வேண்டும் என்று ஆர்வத்துடன் இருந்திருக்கிறார். அவர் வரைந்த சில வரைபடங்களையும் காண்பித்தார். அவை நன்கு திறமையுடன், அழகாக பிரிண்ட் அவுட் போல வரைந்து இருந்தன. அவ்வளவு திறமைகள் அவரிடம் இருந்தது. ஆனால் பெற்றோர்கள் இதை படித்தால் எதிர்காலம் இருக்காது, என்று சொல்லி இன்ஜினியரிங் படிக்க வைத்துவிட்டார்கள்.
பெற்றோர்களிடம், சரி உங்கள் ஆசைக்கு இணங்க இன்ஜினியரிங் படித்து முடித்துவிட்டார். இனி அடுத்த அவருக்கு பிடித்த துறையில் கனவை நோக்கி செல்ல வேண்டும் என்று சொன்னதற்கும், இதற்கே நாங்கள் வருடக்கணக்கில் கஷ்டப்பட்டு படிக்க வைத்தோம். திருப்பி இன்னொரு துறைக்கு மாற அவருக்கு பணம் செலவழிக்க முடியாது என்று அவர்கள் நிலையை சொன்னார்கள். பெற்றோர்கள் தயாராக இல்லாதபோது என்னால் முடிந்தவரை அந்த இளைஞனுக்கு இந்தப் படிப்பை முடித்துவிட்டு ஒரு வேலைக்கு சென்று சம்பாதித்து, அதை வைத்து உனக்கு பிடித்த விஷயத்தை செய் என்று கவுன்சிலிங் கொடுக்கப்பட்டது. கவனம் முழுக்க அரியர்ஸ் கிளியர் பண்ணுவதில் வைத்துவிட்டு இது போன்ற வேலையை பார்த்துக்கொண்டே கூட உனக்கு பிடித்த விஷயத்தை செய்ய முடியும் என்று மோட்டிவேட் செய்து புரிய வைத்தேன்.
இப்போது, குழந்தைகளையும் பெற்றோர்கள் முழு கவனத்துடன் படிக்க விடுவதில்லை. தேர்வு எழுதி அதிக மதிப்பெண் பெற்றால்தான் இந்தப் படிப்பை படிக்க வைக்க முடியும் என்று அனாவசியமாக அவர்களுக்கு இன்னும் மனஅழுத்தம் கொடுத்து திணித்து, அதுவே அவர்களுக்கு சரியாக மதிப்பெண் பெற முடியாமல் போவதுண்டு. எனவே எப்போதும் பெற்றோர்கள் தங்கள் கனவுகளை தங்கள் கனவுகளாகவே வைத்திருக்க வேண்டும். குழந்தைகளை அவர்களுக்கு பிடித்த துறையில் தேர்ந்தெடுக்க விட வேண்டும்.