அத்தியாயம் 20
காத்திருப்பு என்பது சுமையாவதும், சுகமாவதும் அதன் நோக்கத்தில்தான் உள்ளது. காதலியின் வருகைக்காகக் காத்திருப்பது சுகமானது. பேருந்தின் வருகைக்காகக் காத்திருப்பது சுமையானது.
இங்கே லேகாவின் ஃபோனுக்காக காத்திருப்பது கவிக்கு திகிலானதாக இருந்தது. காத்திருப்பு சற்று நீண்டாலும், எதிர்பார்ப்பு வீணாகவில்லை. ஒரு வழியாக லேகாவிடம் இருந்து ஃபோன் வந்தது.
"கவி தியாங்கற பேரே, அந்த ஃபோல்டரில் இல்லையே." என்று லேகா படபடப்புடன் சொன்னார்.
அதே படபடப்புடன் "என்ன மேம் சொல்றீங்க" என்றது கவியின் குரல்.
" ஆமாங்க. தியாங்கற பேர் எங்கேயும் இல்லீங்க. நீங்க கொடுத்த இந்த ஃபோன் நம்பரும் லாக் இன் ஆக மாட்டேங்குது கவி”
"இப்ப என்ன பிறதுங்க மேம்?"
"கவி ஒன்னு ஆஸ்பிட்டல்ல வேற நேம் கொடுத்திருக்கணும். அதேபோல் ஃபோன் நம்பரையும் மாற்றிக் கொடுத்திருக்கணும். இல்லைன்னா அந்த பேரை ஃபோல்டரில் இருந்து டெலிட் பண்ணியிருக்கணும்."
"மேம் டெலிட் பண்றது சுலபமான விசயமா?"
"பாஸிபிலிட்டி ரொம்ப கம்மி கவி"
"மறுபடியும் முதலில் இருந்தா, திரும்பவும் அமேசான் காட்டுக்கு வந்தது போல இருக்கு மேம். ஒரு 10 நிமிடம் வெயிட் பண்ணுங்க. ஒரு கால் பண்ணிட்டு திரும்பவும் லைனுக்கு வரேன்” என்றவள் இணைப்பைத் துண்டித்தாள்.
தியாவின் அம்மா சுந்தரியின் இணைப்பு உயிர் பெற்றது.
"அம்மா, எப்படி இருக்கீங்க?” என்று நலத்தை விசாரித்துவிட்டு, தொடங்கினாள் உரையாடலை.
"பெற்றவளைப் பறிகொடுத்து விட்டு, நடைபிணமா நிதமும் செத்துகிட்டு இருக்கேன் கவி" என்று அழுதார்.
"அம்மா, ஆறுதல் சொல்ல முடியாத சோகம். என்ன பண்றது நீங்க மத்தவங்களுக்காக வாழ்ந்துதான் ஆகனும்." என்று பாட்டி மாதிரி சொன்னாள்.
"ஆமாம்மா, இன்னொரு மகளைக் கரைசேர்க்க வேண்டியிருக்கே" என்று அழுதார்.
சில நொடி மவுனத்திற்குப் பிறகு "அம்மா, தியாவிற்கு வேற பேர் ஏதாவது இருக்கா மா? "என்று கவி கேட்க,
" ஆமாண்டா செல்லம். திவ்யபாரதி மா, ஏம்மா திடீர்ன்னு கேட்கற?"
"ஒன்னும் இல்லைம்மா, அப்பறம் சொல்றேன். தியாவை அழைச்சிக்கிட்டு ராகவ் கிளினிக்குக்கு யார் போனதும்மா? " என்றாள் கம்மிய குரலில்.
"தியா, அவ அப்பாக் கூடத்தாம்மா ஆஸ்பிட்டல் போனாள்."
"அப்பாவின், செல் நம்பர் சொல்லுங்க மா” என்று கவி கேட்டதும் சுந்தரி சொல்ல ஆரம்பித்தார்.
கவி அதைக் குறித்துக்கொண்டு, ”நான் அப்பறம் வீட்டிற்கு வரேன் மா” என்று சொல்லி ஃபோனை வைத்தாள்.
பெயரையும் , ஃபோன் நம்பரையும் லேகாவிற்கு வாட்ஸ்அப் பண்ணினாள். லேகா மெசேஜ் பார்த்துவிட்டு, வெயிட் என்று மெசேஜ் அனுப்பியிருந்தாள்.
சிறிது நேரத்தில் லேகாவே லைனுக்கு வந்தாள். " கவி என்ன நடக்குதுன்னு தெரியலை, சீனியர் டாக்டர் அறையை விட்டு போகமாட்டேன்னு அங்கேயே இருக்கார். அவருக்குத் தெரியாம சிஸ்டம் கனெக்ட் பண்ணலாம்னு பார்த்தால், சர்வர் பிராப்ளம் னு வருது கவி. " என்று தன் இயலாமையைச் சொன்னாள்.
"மேம் இப்ப ஒன்னுமே பண்ணமுடியாதுங்களா?” என்று நீட் எக்ஸாம்க்கு லேட்டா போன மாணவன் மாதிரி நொந்து போய்க்கேட்டாள் கவி.
" அந்த பிளாட் மண்டையன், கொஞ்சம் ஆஸ்பிட்டல் வரலைன்னா நான் தேடி எடுத்திடுவேன்" என்று நம்பிக்கையுடன் சொன்னார் லேகா.
"ஒகே தேங்க்ஸ் மேம்" என்று ஃபோனை வைத்து விட்டு உடனே பர்தா பெண்ணுக்கு ஃபோன் போட்டு 5 நிமிடம் பேசிவிட்டு நிம்மதி பெருமூச்சுடன் ஃபோனை கட் பண்ணினாள் கவி.
மணி அண்ணாவிற்கு ஃபோன் பண்ணிவிட்டு, குப்பண்ணா பிரியாணி ரெஸ்ட்டாரண்டில் டேபிள் புக் பண்ணிவிட்டு, பர்தா பெண்ணிற்காக வெயிட் பண்ணிக்கொண்டிருந்தாள் கவி.
சரியாக ஒரு மணி நேரம் கழித்து பர்தா பெண் வந்தாள். இருட்டான ஒரு மூலையில் கவி அமர்ந்திருப்பதைப் பார்த்துவிட்டு அங்கு வந்தாள்.
" கவி சக்ஸஸ்" என்று சொல்லிக்கொண்டே எதிரில் அமர்ந்தாள்.
நடந்ததையெல்லாம் லெக்பீஸை விழுங்கிக்கொண்டே விவரித்தாள். இருவரும் சாப்பாட்டு மூடுக்கு வந்தனர்.
ஹேண்ட் வாஷ் பண்ணிட்டு திரும்பும் போது யார் மீதோ மோதினாள் கவி.
“சாரி சார்...”என்று சொல்லிக் கொண்டே நிமிர்ந்தாள்.
நிமிர்ந்தவள் தலையில் பாறாங்கல் விழுந்தது போல் ஆகிவிட்டாள். கவியின் அப்பா எஸ்.கே எஸ்.தான் நின்று கொண்டிருந்தார்.
(திக் திக் தொடரும்)
சாம்பவி சங்கர் எழுதும் விறுவிறு க்ரைம் திரில்லர் தொடர்... மரண முகூர்த்தம் #19