![jay zen manangal vs manithargal 57](http://image.nakkheeran.in/cdn/farfuture/hoa2t5MjoCpvY85viQwjQUCgPr1o3ZvpaImkkrcq94E/1726741167/sites/default/files/inline-images/jayzen_22.jpg)
தான் சந்தித்த பல்வேறு கவுன்சிலிங் பற்றியும், பல வகையான மனிதர்களுக்கு அவர் கொடுத்த கவுன்சிலிங் குறித்தும் ‘மனங்களும் மனிதர்களும்’ தொடரின் வழியாக ஜெய் ஜென் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார். அந்த வகையில், கணவரால் வீட்டில் சிறைவாசி போல் இருக்கும் பெண்ணுக்கு கவுன்சிலிங் பற்றி விளக்குகிறார்.
நடுத்தர பெண்மணி ஒருவர் என்னிடம் வந்தார். கணவர், மனைவி, ஒரு ஆண் பிள்ளை, ஒரு பெண் பிள்ளை என்ற குடும்பம் இவருக்கு இருக்கிறது. ஒரு குறை கூட சொல்லமுடியாத மிகவும் நல்ல மனிதர் தன்னுடைய கணவர். தனக்கு தேவையான அனைத்து விஷயங்களையும் கணவர் செய்துவிடுவார். அதிக செலவாக இருந்தாலும், கணவர் செய்துவிடுவார். இதையெல்லாம் கணவர் செய்வதன் மூலம், எதை பற்றியும் ஒரு வார்த்தை கூட கருத்து சொல்ல தனக்கு உரிமை இல்லை. கணவர் புண்படாத வகையில் தாம் நடந்துகொள்ள வேண்டும். இதற்கு தனது அப்பா அம்மாவும் ஆதரவாக இருக்கிறார்கள். ஆரம்பித்தில், தனக்கு கிடைத்த கணவர் போல் யாருக்கும் கிடைக்கமாட்டார் என்று எண்ணிய பின்னர் வருடங்கள் செல்ல செல்ல கணவர் மனைவி உறவுக்குள் இருக்கும் ஒரு உணர்வு இழை இல்லாமல் இருந்தது. கிச்சன் முதல் பெட் ரூம் வரை, கணவர் என்ன நினைக்கிறாரோ அதை செய்ய வேண்டும். , அழுத்தி வைக்கப்பட அடிமை போல் உணர்வதாக சொன்னார்.
கணவர் நினைத்ததை மீறி ஏதாவது செய்துவிட்டாலோ, அல்லது பெண்மைக்கே உள்ள உணர்வுகள் மற்றும் ஆசைகளை கணவரிடம் இருந்து எதிர்பார்த்தால் அது இருக்கக்கூடாது என்று கணவர் நினைக்கிறார். ஒருவேளை கணவரிடம் இருந்து அன்பு வெளிவர வேண்டும் என எதிர்பார்த்து வெளிகாட்டினால், தனக்கு இருக்கும் கம்ஃபோர்ட் நிறுத்துவைத்துவிடுவார். உதாரணமாக, தினமும் காரில் டிரைவர் இல்லாமல் தனியாக போகச் சொல்வார். இன்னும் எல்லை மீறினால், கார் இல்லாமல் டூ வீலரில் போகச் சொல்வார். இன்னும் கொஞ்சம் எல்லை மீற மீற தன்னுடைய கம்ஃபோர்ட்டை குறைத்துக்கொண்டே வருவார். பெற்றோரிடம் இதை பற்றி சொன்னால், கணவர் தான் எல்லா வசதிகளை செய்து தருகிறாரே எனக் கணவருக்கு ஆதரவாக இருக்கிறார்கள். கிட்டத்தட்ட ஆண் ஆதிக்கத்தினுடைய இன்னொரு வெர்சன் இது.
தேவையான அனைத்தும் கிடைக்கும் ஆனால், கணவருக்கு புண்படாத வகையில் நடந்துகொள்ள வேண்டும். கிட்டத்தட்ட சிறை வீட்டில் இருப்பது போல் மனைவி உணர்கிறார். கணவரோடு வெளியே செல்ல ஆசைப்பட்டு கணவரிடம் தன் விருப்பத்தை சொல்ல, அது கணவருக்கு பிடிக்காமல் போகிறது. இதனால், மனைவிக்கு கொடுக்கும் ஒவ்வொரு கம்ஃபோர்ட்டும் ஒரு வாரத்தில் கொஞ்ச கொஞ்சமாக நிறுத்தி வைக்கப்படுகிறது. இதனால் மன உளைச்சல் அதிகமாகி, யாருக்கும் தெரியாமல் மனைவி தற்கொலை முயற்சி செய்கிறார். வீட்டில் வேலை பார்க்கும் ஒருவர் இதை கண்டுபிடித்து மனைவியை காப்பாற்றிவிட்டார். இந்த நிலையில் தான் என்னை பார்த்து விஷயத்தை சொன்னார்.
கணவரை வரவழைக்கமுடியுமா கேட்டதற்கு அவர் வாய்ப்பே இல்லை என்று சொல்லிவிட்டார். கணவரோடு இது போன்று வாழ பிடிக்கவில்லை என்றால் ஏன் டைவர்ஸ் நோட்டீஸ் அனுப்பக்கூடாது என்று கேட்டேன். இப்படியெல்லாம் யோசிக்கமுடியவில்லை என்று அவர் சொல்ல, அப்படியென்றால் கணவரோடு அட்ஜஸ்ட் செய்துகொண்டு வாழ பழகிக் கொள்ளுங்கள் என்றேன். ரொம்ப குழப்பமாக இருக்கிறது என்றார். டைவர்ஸ் நோட்டீஸ் அனுப்புவதாலேயே டைவர்ஸ் ஆகிவிடாது. அது ஒரு நீண்ட கால செயல்முறை. டைவர்ஸ் நோட்டீஸ் அனுப்பிய பிறகு மாறிய கணவர்கள் நிறைய உண்டு என்று அவரிடம் எடுத்து கூறி அவரிடம் யோசித்து பார்க்கும்படி சொன்னேன். அதோடு அந்த கவுன்சிலிங் செக்ஷன் முடிந்தது. மூன்று மாதம் கழித்து அந்த பெண் என்னிடம், டைவர்ஸ் நோட்டீஸ் அனுப்பியதில் இருந்து கணவர் நிறையவே மாறிவிட்டார். தனக்கு பிடித்த அனைத்து விஷயங்களை பார்த்து பார்த்து செய்கிறார். கம்பீரமான இருந்த கணவர், கண்ணாடி போல் உடைந்து அவருடைய போலித்தன்மை போய் உண்மையான முகம் வெளிவந்துவிட்டது என்றார்.