Skip to main content

காதல் திருமணம் செய்துகொண்டு கஷ்டப்படும் மகள்; வேதனைப்படும் பெற்றோர்  - டிடெக்டிவ் மாலதியின் புலனாய்வு:83

Published on 17/10/2024 | Edited on 17/10/2024
 detective-malathis-investigation-83

முதல் பெண் துப்பறிவாளர் மாலதி, தான் துப்பறிந்த வழக்குகளில் உள்ள சுவாரசியமான விஷயங்களை நம்மோடு பகிர்ந்து கொண்டு வருகிறார். அந்த வகையில், ஒரு சம்பவத்தைப் பற்றியும், அதில் நடந்தவற்றையும் விவரிக்கிறார். 

ஒரு பெற்றோர் என்னிடம் வந்து, தங்களின் மகள் ஒரு பையனை காதலித்து திருமணம் செய்துவிட்டாள். வசதி இல்லாமல் அவனுடன் வாழ்ந்து வருகிறாள். ஒருமுறை கணவனின் வீட்டில் ஏ.சி. இல்லை. அதனால் ஏ.சி. வாங்க பணம் வேண்டுமென்று மகள் கேட்டால் அதை வாங்கிக்கொடுத்தோம். இன்னொரு முறை கணவனுக்கு பைக் வேண்டுமென்று கேட்டாள் அதையும் வாங்கிக்கொடுத்தோம். வசதியாக வாழ்ந்த தங்களின் மகள் இப்போது எங்கு இருக்கிறாள்? எப்படி கஷ்டப்படுகிறாள்? என்று எதுவுமே தெரியவில்லை. உறவினர்களுக்கு தெரிந்தால் தவறாக பேசுவார்கள். அதனால் மகளைப் பற்றி விசாரித்து சொல்லுங்கள் என்று கூறினர்.  

அதன் பிறகு அந்த பெற்றோரிடம் அவர்களின் மகள் தொடர்பான விவரங்களை வாங்கிக்கொண்டு அந்த பெண்ணை கண்காணிக்க தொடங்கினோம். அவர்களின் மகள் ரூ.30,000 சம்பளத்தில் வேலை பார்த்து தனது கணவனுடன் வசித்து வந்தாள். கணவன் வேலையின்றி வீட்டிலேயே படுத்து மனைவியின் சம்பாத்தியத்தில் ஜாலியாக இருந்து வந்தான். இதையெல்லாம் ஒரு ரிப்போட்டாக எடுத்து அந்த பெற்றோரிடம் கொடுத்தோம். பின்பு அந்த பெற்றோர் தங்கள் ஒரே மகள் இப்படி கஷ்டப்படுகிறாளே என்று நினைத்து மிகவும் வருத்தப்பட்டனர். 

கடைசியாக நான் அந்த பெற்றோரிடம், உங்களை நீங்கள் பார்த்துக்கொள்ளுங்கள் மகளைப் பற்றி யோசித்து மீண்டும் அவளுக்கு பணம் கொடுத்து பழக்க வேண்டாம். அவளை உழைத்து சம்பாதிக்க விடுங்கள். ஒரு வயதிற்கு மேல் குழந்தைகளை உழைக்க பழக்கிவிட்டுவிட்டு ஓய்வெடுத்து சந்தோஷமாக இருங்கள். முடிந்தால் சம்பாதித்த பணத்தை வைத்து சந்தோஷமாக சுற்றுலா சென்று அனுபவியுங்கள் என்று சில அறிவுரைகளை கூறி அனுப்பி வைத்தோம்.