முதல் பெண் துப்பறிவாளர் மாலதி, தான் துப்பறிந்த சுவாரசியமான விசயங்களை நம்மோடு பகிர்ந்துகொண்டு வருகிறார். அந்த வகையில், டைவர்ஸுக்கு ஆதாரம் கேட்ட கணவன் கொடுத்த ஒரு வழக்கு குறித்து நம்மிடையே விவரிக்கிறார்.
ஒரு பையன் தான் என்னிடம் வந்து கேஸ் கொடுத்தார். தனக்கு, தன்னுடைய மனைவிக்கு இது இரண்டாவது திருமணம். திருமணம் நடந்த சில நாட்களில் நன்றாக இருந்தது. சில மாதங்கள் கழித்து வார விடுமுறையின் போது மனைவி அடிக்கடி வெளியே கிளம்பிவிடுவார். இப்படியே மாதங்கள் செல்ல செல்ல, தன்னையும் வெளியே மனைவி வெளியே அழைத்து சென்றாள். அங்கு, எல்லா வயது கொண்ட பெண்கள், ஆண்கள் இருக்கின்றனர். அவர்கள் மற்ற நபர்களோடு உடலுறவு வைத்துக்கொள்கிறார்கள். தன்னையும், இன்னொரு பெண்ணோடு உறவு வைக்குமாறு மனைவி கூறுகிறாள். என்ன செய்வது என்று தெரியவில்லை, இதில் இருந்து வெளியே வர வேண்டும் என்று அந்த பையன் கூறினான். ஆனால், அந்த பையனும் அந்த தவறை செய்திருக்கிறார் என்பது அவருடைய பேச்சில் இருந்து எனக்கு தெரிந்தது.
இதில் தான் வெளியே வந்தாலும், மனைவி வெளியே வர மறுக்கிறாள். இருக்கிற வரையில் ஜாலியாக இருக்க வேண்டும், குழந்தையெல்லாம் நமக்கு வேண்டாம் என்று மனைவி கூறுகிறாள். அதனால், எதாவது ஆதாரத்தை கைப்பற்றி அவளை டைவர்ஸ் செய்ய வேண்டுமென்று அந்த பையன் கூறினார்.
அதன்படி, நாங்கள் அந்த கேஸை எடுத்துக்கொண்டு, அந்த பெண்னை ஃபாலோவ் செய்தோம். அந்த பையன் சொல்கிற மாதிரி தான் அங்கு நடந்தது. இந்த மாதிரி உறவு வைத்துக்கொள்வதற்கே நிறைய பேர் இருக்கிறார்கள். யாரென்று தெரியாதவர்கள் கூட திடீரென்று நன்றாக பழகுவதை பார்த்தால் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. பார்க், ஹோட்டல் என எங்கு சென்றாலும், அங்கு நட்பு உருவாகி இந்த மாதிரி உறவு வைத்துக்கொள்கிறார்கள். இதற்கென்றே ஒரு குரூப்பே இருக்கிறார்கள். எந்த ஒரு வயது வித்தியாசமில்லாமல் பழகி கடைசியில் செக்ஸில் முடிகிறது. கிட்டத்தட்ட மிருகம் போல் வாழ்க்கையை வாழ்கின்றனர். அந்த பெண்ணை தொடர்ந்து ஃபாலோவ் செய்து, ஆதாரத்தை எடுத்து அந்த பையனிடம் கொடுத்தோம். அந்த உறவில் தான் வெளியே வந்து டைவர்ஸ் வாங்குவதற்காக ஆதாரத்தை கேட்ட அந்த பையன், ஆதாரத்தை பெற்றுக்கொண்டு சென்றார்.