அமித்ஷாவின் மகன் செய்த ஊழல்! (JAY SHAH SCAM).
அமித் ஷாவின் மகன் ஜெய் ஷா. இவர் 50 ஆயிரம் முதலீட்டில் தொடங்கிய ஒரு நிறுவனம், ஒரே ஆண்டில் 80 கோடி ரூபாய் லாபம் காட்டியது. அதாவது முதலீட்டைப் போல 16 ஆயிரம் மடங்கு லாபத்தை ஈட்டிய கம்பெனி உலகத்திலேயே இதுவாகத்தான் இருக்கும் என்று பெரிய தொழில் அதிபர்களே வியப்பாக பேசிக்கொண்ட ஊழல் இது.
காமெங் நீர்மின்திட்ட ஊழல் (அருணாச்சலபிரதேசம்) KAMENG HYDRO ELECTRIC PROJECT SCAM (ARUNACHAL PRADESH).
வடகிழக்கு மாநிலங்களின் மின்சார கழகத்தின் தலைமை ஊழல் கண்காணிப்பு அதிகாரியான சதிஷ் வர்மா மின்துறையில் நடைபெற்ற ஊழலை விசாரித்தார். அவர் தனது விசாரணை அறிக்கையில் மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜ்ஜு, அவருடைய உறவினரும் காண்ட்ராக்டருமான கோபி ரிஜ்ஜு ஆகியோருடன் பல உயர் அதிகாரிகள் மீது குற்றம்சாட்டியிருக்கிறார். இவர்கள் இரண்டு அணைகள் கட்டியதிலும், அந்த அணைகளில் 600 மெகாவாட் நீர் மின் திட்டத்தை நிறைவேற்றுவதிலும் 450 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் செய்திருப்பதாக கூறியிருக்கிறார்.
எல் அண்ட் டி நில அபகரிப்பு ஊழல் (குஜராத்) L&T LAND SCAM (GUJARAT)
குஜராத் மாநிலம் வதோதராவில் எல் அண்ட் டி கட்டுமான நிறுவனத்துக்கு 80 லட்சம் ரூபாய் அளவுக்கு நிலம் ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றம்சாட்டப்பட்டது. ஒரு தொழில்நுட்ப பூங்கா உருவாக்குவதற்காக 2005 மற்றும் 2006 ஆம் ஆண்டு இந்த நிலம் ஒதுக்கப்பட்டது. அதே இடத்திலிருந்து அரசுக்கு கிடைக்க வேண்டிய 129 கோடி ரூபாயை அந்த நிறுவனத்துக்காக குஜராத் அரசு விட்டுக்கொடுத்தது.
குஜராத் நில ஊழல் LAND SCAM (GUJARAT).
குஜராத் மாநில பாஜக முன்னாள் முதல்வர் ஆனந்திபென் படேல். இவருடைய மகள் அனார் படேல். இவர் குஜராத் அரசிடமிருந்து மிகக்குறைந்த விலையில் 422 ஏக்கர் நிலத்தை பெற்றார். ஒரு சதுர அடி வெறும் 15 ரூபாய்க்கு இவர் வாங்கியிருக்கிறார். ஆனால், அந்த இடத்தின் சந்தை மதிப்பு அப்போது சதுரமீட்டருக்கு 180 ரூபாயாக இருந்தது. அதாவது அனார் படேலுக்காக நிலத்தின் விலையை 91.6 சதவீதம் அளவுக்கு தள்ளுபடி செய்திருக்கிறது குஜராத் அரசு.
உத்தரகாண்ட் மாநில நில ஊழல் LAND SCAM (UTTARAKHAND).
உத்தரகாண்ட் மாநில பாஜக முன்னாள் முதல்வர் ரமேஷ் பொக்ரியால் 400 கோடி ரூபாய் அளவுக்கு நில ஊழல் செய்தார் என்று குற்றம்சாட்டப்பட்டது. ரியல் எஸ்டேட் உரிமையாளர் ஒருவருக்காக அரசு 400 கோடி ரூபாய் மதிப்புள்ள அரசு நிலத்தை வெறும் 13 கோடி ரூபாய்க்கு விற்றார். தொழிற்சாலைக்கான நிலத்தை மாற்றுவதற்கான பதிவுத் தொகையிலும் ஏராளமாக தளர்த்தப்பட்டது.