Skip to main content

ஆதனூர் சோழன் எழுதும் பாஜகவின் ஊழல்கள் ஏ டூ இஸட்!!! பகுதி- 19

Published on 31/12/2019 | Edited on 06/01/2020

குஜராத் குடிநீர் வாரிய ஊழல்!- WATER BOARD SCAM (GUJARAT)

athanur chozhan bjp party states government a to z part 19

குஜராத் மாநில குடிநீர் மற்றும் வடிகால் வாரியம் கண்டபடி செய்ததில் 340 கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளது. இந்த வாரியம் எப்படி செலவு செய்ய வேண்டும் என்று இந்திய சார்ட்டட் அக்கவுண்டன்ட் நிறுவனம் பல வழிமுறைகளை வகுத்துள்ளது. அதை பின்பற்றாமல் விதிகளை மீறி செலவு செய்து கணக்கு எழுதப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. இந்த ஊழல் குறித்து முன்னாள் முதல்வர் சுரேஷ் மேத்தா கடுமையாக விமர்சனம் செய்தார். 2017-2018 நிதியாண்டில் மட்டும் இந்த ஊழல் என்றால், இதற்கு முன் எவ்வளவு நடந்ததோ என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.


மத்தியப் பிரதேச நீர்வளத்துறையில் ஊழல்!- WATER RESOURCES DEPT.SCAM (MADHYA PRADESH)

athanur chozhan bjp party states government a to z part 19


மத்தியப்பிரதேச மாநில பாஜக முதல்வராக இருந்த சிவராஜ் சிங் சவுகான் நிர்வாகத்தில் அரசின் பல்வேறு திட்டங்களில் ஏராளமான நிதி மோசடிகள் நடைபெற்றிருப்பதை மத்திய கணக்கு தணிக்கை அதிகாரி கண்டுபிடித்து வெளியிட்டார். இந்த முறைகேடுகளால் அரசுக்கு 8 ஆயிரத்து 17 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாக அதிகாரி தெரிவித்தார். நீர்வளத்துறையில் பணிபுரியும் அதிகாரிகள், பொதுப்பணித்துறை விதிகளை மீறியிருப்பது தெரியவந்தது. திட்டத்தை தொடங்குவதற்கு முன் எந்திவிதமான மதிப்பீடும் அளவீடும் செய்யாததே மக்கள் பணம் விரையமானதற்கு காரணம் என்று கூறப்பட்டது.


நிலக்கடலைக்கு பதிலாக கற்களும் மணலும் நிரப்பி ஏமாற்றிய குஜராத் அரசு!- WEIGHT MANIPULATION SCAM

athanur chozhan bjp party states government a to z part 19


குஜராத் மாநிலத்தில் விவசாயிகளிடம் இருந்து ஏராளமான நிலக்கடலையை அரசு கொள்முதல் செய்தது. இந்த நிலக்கடலை மொத்தத்தையும் இடைத்தரகர்களின் உதவியோடு அரசு அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் சேர்ந்து எண்ணெய் உற்பத்தி ஆலைகளுக்கு விற்றுவிட்டனர். இந்தத் திருட்டை மறைப்பதற்காக 31 ஆயிரத்து 500 சாக்குகளில் கூழாங்கற்களையும், மணலையும் கலந்து நிரப்பினார்கள். இந்த திருட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர். ஆனால், இந்த ஊழலில் தொடர்புடைய பாஜக தலைவர்களை அரசு காப்பாற்றுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.
 

எக்ஸ்ரே டெக்னிஷியன் பணிநியமனத்தில் ஊழல்!- X- RAY TECHNICIAN RECRUITMENT SCAM

athanur chozhan bjp party states government a to z part 19


எக்ஸ்ரே தொழில்நுட்ப உதவியாளர்களுக்கான தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வு முடிந்த நிலையில், தேர்வு எழுதியவர்களுக்கு போன் மூலம் அழைப்பு வந்தது. பணம் கொடுத்தால் வேலை உறுதி என்று சொல்லப்பட்டது. வேலைக்கு 2 முதல் 4 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும் என்றார்கள். நுழைவுத் தேர்வில் தேறி, நேர்முகத் தேர்வுக்கு தேர்வானவர்களுக்கே இந்த போன்கள் வந்தன. பணம் கொடுத்த பலருடைய பெயர் இறுதிப் பட்டியலில் இடம்பெறவில்லை. இதையடுத்தே இந்த ஊழல் வெளியே வந்தது.


எடியூரப்பாவிடம் லஞ்சம் பெற்ற பாஜக தலைவர்கள்!- YEDDY DIARIES (KARNATAKA)

athanur chozhan bjp party states government a to z part 19


பாஜகவின் மத்திய தலைவர்களுக்கு பல்வேறு காலகட்டங்களில் எடியூரப்பா லஞ்சம் கொடுத்திருக்கிறார். இதுபற்றிய தகவல்களை அவர் ஒரு டைரியில் குறித்து வைத்திருந்தார். அந்த டைரி வருமானவரித் துறை அதிகாரிகளிடம் சிக்கியது. அந்த டைரியை தி கேரவான் பத்திரிகை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. பாஜகவின் மத்திய கமிட்டிக்கு ஆயிரம் கோடி ரூபாயும், அருண் ஜெட்லிக்கு 150 கோடி ரூபாயும், நிதின் கட்கரிக்கு 150 கோடி ரூபாயும், ராஜ்நாத் சிங்கிற்கு 150 கோடியும், எல்.கே.அத்வானிக்கு 100 கோடியும், முரளி மனோகர் ஜோஷிக்கு 50 கோடியும், கட்கரி மகன் திருமணத்துக்கு 10 கோடியும், சில நீதிபதிகளுக்கு 250 கோடியும், வழக்கறிஞர்களுக்கு 50 கோடியும் கொடுத்த விவரங்கள் அதில் இடம்பெற்றிருந்தன.

2009- ஆம் ஆண்டு கர்நாடகா சட்டமன்றம் வெளியிட்ட டைரியில், இந்த விவரங்களை எடியூரப்பா தனது சொந்த கையெழுத்தில் கன்னடத்தில் எழுதி வைத்திருந்தார். இந்த டைரியை வைத்து விசாரிக்க அமலாக்கத்துறை அதிகாரிகள் விரும்பினார்கள். ஆனால், தனது பெயர் இடம்பெற்றிருந்ததால் அருண்ஜெட்லி நடவடிக்கைக்கு அனுமதி தர மறுத்துவிட்டார்.
 

எடியூரப்பா நில ஊழல்!- YEDDYURAPPA LAND SCAM (KARNATAKA)

athanur chozhan bjp party states government a to z part 19


கர்நாடகா முதல்வராக இருந்தபோது அரசு நிலத்தை தனது குடும்பத்தினருக்கும், தன்னை பின்பற்றுகிறவர்களுக்கும் முறைகேடாக கொடுத்தார். இதுதொடர்பாக போதுமான ஆதாரம் இருப்பதாக லோக்அயுக்தா அறிக்கை கொடுத்தது. அதன் அடிப்படையில் எடியூரப்பா மீது வழக்கு தொடரலாம் என்று அறிவுறுத்தியது. தொழிற்பேட்டையில் இரண்டு ஏக்கர் நிலத்தை பெங்களூரில் உள்ள தனது குடும்ப நிறுவனங்களுக்கும், தனது மகளுக்குச் சொந்தமான பிபிஓ நிறுவனத்துக்கு 2 ஏக்கர் நிலமும், பெங்களூருவில் தனது மகனுக்கு ஒரு குடியிருப்பு மனையும், தன்னை பின்பற்றும் ஆதரவாளர்களுக்கு சுரங்கத்திற்காக 134 ஏக்கர் நிலமும், மைசூருவில் உள்ள தனது உறவினர்களுக்காக குடியிருப்பு மனைகளும் தாராளமாக வாரிக் கொடுத்திருக்கிறார் எடியூரப்பா.


ஸ்மிருதி இராணியின் கணவரின் நில ஊழல்!- ZUBIN IRANI LAND SCAM (MP)

athanur chozhan bjp party states government a to z part 19


மத்தியப்பிரதேச மாநிலம் உமாரியா மாவட்டத்தில் ஒரு பள்ளிக்குச் சொந்தமான நிலத்தில் ஒரு பகுதியை அங்குள்ள கம்பெனி ஒன்று அபகரித்தது. இந்த சட்டவிரோதமான நில அபகரிப்பை பள்ளியின் தலைமை ஆசிரியர் வெளியுலகிற்கு கொண்டுவந்தார். அதன்பிறகுதான் விசாரணை நடைபெற்றது. விசாரணையில் நிலத்தை அபகரித்த கம்பெனியில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணியின் கணவர் பங்குதாரர் என்ற விஷயம். தனது மனைவியின் அமைச்சர் பதவி கொடுத்த தைரியம் அவருடைய கணவருக்கு இந்தளவு துணிச்சலைக் கொடுத்திருக்கிறது.