Skip to main content

மருமகளை ஏமாற்றிய மாமனார்; கணவன் மனைவி உறவில் ஏற்பட்ட சிக்கல் -  வழக்கறிஞர் சாந்தகுமாரியின் வழக்கு எண்: 63

Published on 01/08/2024 | Edited on 01/08/2024
Advocate santhakumaris valakku en 63

குடும்ப நல வழக்குகள் பலவற்றை கையாண்டது குறித்த அனுபவங்களை ‘வழக்கு எண்’ என்ற தொடரின் வழியே தொடர்ச்சியாக வழக்கறிஞர் சாந்தகுமாரி பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் ஒரு வழக்கைப் பற்றி இன்று பார்ப்போம்.

இது ஒரு பெண்ணுடைய கதை. ஆனால், ஒரு கணவன் தான் இந்த வழக்கைப் போடுகிறார். கோயம்புத்தூர் மாவட்டத்தில் கேஸ் ஒன்று ஃபைல் ஆகி சென்னையில் நதியா என்ற பெண்ணுக்கு நோட்டீஸ் போகிறது. அதில், நீங்கள் மணவாழ்க்கையில் ஒத்துவராததாலும், கணவனை விட்டு பிரிந்து வந்ததாலும், உங்கள் கணவர் சிவ சுப்பிரமணி விவகாரத்து கேட்டுள்ளார் என்று குறிப்பிட்டுள்ளது. அதன் பின்னர், நதியா ஒரு கைக்குழந்தை மற்றும் தாயாருடன் என்னைப் பார்க்க வந்தார். நதியாவின் அப்பா இறந்துவிட்டார். வசதி குறைந்தவர்களாக இருந்தாலும் தன் மகள் பி.இ வரை படித்து பெரிய கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.  பெண் பார்க்கும் போது கூட, அவரது அப்பா கேட்டவுடன் பெண்ணை பிடித்திருக்கிறது என்று மாப்பிள்ளை சொல்கிறார் 

மாப்பிள்ளைக்கு அம்மா கிடையாது. பெண்ணுக்கு 15 பவுன் நகை போடுகிறார்கள். மாப்பிள்ளை ஒரு பெரிய கம்பெனியில் பார்ப்பதாகவும், வீட்டில் ஒரு பிசினஸ் பார்ப்பதாகவும் சொல்ல பெண் வீட்டாருக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. அதன் பின்பு நல்லபடியாக திருமணம் நடக்கிறது. பெண்ணும் மாமனார் சொல்படி ஒர்க் ஃப்ரம் ஹோமில் வேலை பார்க்கிறார். எல்லாமே சந்தோஷமாகத்தான் நடக்கிறது. கொஞ்ச நாள் போக போக தான் தெரிகிறது மாப்பிள்ளை வீட்டை விட்டே வெளியே போக மாட்டிருக்கிறான். வேலைக்கு போகவில்லையா என நதியா கேட்க திருமணத்திற்காக ஓனர் தனக்கு ஒரு மாதம் லீவ் கொடுத்திருக்கிறார் என்று சிவசுப்பிரமணி சொல்கிறார். வீட்டில் இருந்து வேலை பார்ப்பதாக சொன்ன இடத்தை பார்த்தால் அந்த அறைக்குள் ஒன்றுமே கிடையாது. ஒரு பிசினஸ் நடத்துவதற்கான எந்த அறிகுறியும் அந்த அறையில் இல்லை. இதை பற்றி நதியா கேட்க, நீ தான் அவனை சரிசெய்ய வேண்டும் என்று மாமனார் சொல்கிறார். கொஞ்ச நாள் போக மாப்பிள்ளையின் நடவடிக்கை மீது நதியாவுக்கு சந்தேகம் வருகிறது. ஒரு நார்மல் மனிதரை இல்லாமல் பேச தெரியாத மனிதரை போல் அவர் இருக்கிறார். கணவரிடம் எப்போது பேச போனாலும் மாமனார் குறுக்கே வந்து அதற்கு பதில் பேசி போகிறார். எதையோ இந்த குடும்பத்தில் மறைக்கிறார்கள் என்ற சந்தேகம் இந்த பெண்ணுக்கு வருகிறது. அந்த பையனுக்கு ஐ.கியூ ரொம்ப கம்மியாக இருப்பதால் சுறுசுறுப்பு இல்லாமல் தன் அப்பாவின் சொல்படியே நடக்கிறான். 

சில மாதங்கள் கழித்து, அந்த பெண்ணுக்கு இருவீட்டார் பக்கத்தில் இருந்து  போட்டிருந்த நகைகளை, அவரது பெயரில் மாமனார் பேங்கில் போடுகிறார். எனக்கு வேலைக்குப் போகவே பிடிக்காது என் அப்பா தான், நான் வேலை பார்ப்பதாக உங்களிடம் பொய் சொன்னார் என்று கணவன் சொல்ல, நதியாவுக்கு உண்மை தெரியவருகிறது. கர்ப்பிணியான நதியா, எல்லாத்தையும் பொறுத்துக்கொண்டு மீண்டும் வேலைக்காகச் சென்னைக்கு செல்கிறார். ஒரு 10, 20 நாட்களிலே கணவன் பெட்டியைத் தூக்கிக்கொண்டு சென்னைக்கு வந்து நதியா வீட்டுக்கு வருகிறான். நதியாவும், தன் குழந்தைக்கு அப்பா வேண்டும் என்று பொறுத்துக்கொண்டு, அவனைப் பக்கத்து கடை ஒன்றில் வேலைக்காக அனுப்புகிறாள். ஒரு வருடம் செல்ல, பெண்ணின் தாயாரும் ஏதோ கோபத்தில் ஒரு வார்த்தை சொன்னாலும், அதை அப்படியே தன் அப்பாவிடம் சொல்கிறார். குழந்தைக்கு ஒரு வருடம் ஆன பின், ஏதோ ஒரு கோபத்தில் அந்த பையனும் தன் ஊருக்கே சென்றுவிட்டான். நதியாவும் வேலை பார்த்துக்கொண்டே தன் கணவனையும் பார்த்துக்கொண்டு 6 மாதத்திற்கு ஒரு முறை தன் மாமனார் வீட்டுக்கு அடிக்கடி சென்று வருகிறார். ஒரு நாள் ஏதோ ஒரு வாக்குவாதத்தில் மாமனாருக்கு நதியா மீது கோபம் வருகிறது. நதியாவும் குழந்தையைத் தூக்கிட்டு தனியாக சென்னைக்கு வந்துவிடுகிறாள். 

குழந்தைக்குப் பிறந்தநாள் வர, பெரிய அளவில் இதை செய்ய வேண்டும் இதற்கு நான் பணம் கொண்டு வருகிறேன் என்று கணவன் கூற அதை நம்பி நதியா பெரிய ஹோட்டலை புக் செய்கிறார். பெரிய அளவில் செய்கிறார்கள். ஆனால், தான் எவ்வளவோ முயற்சி செய்தும் என்னால் பணத்தைக் கொண்டு வரமுடியவில்லை, குழந்தைக்காக மட்டும் அப்பா ரூ.5,000 மட்டும் கொடுத்தார் எனக் கணவர் சொல்ல நதியாவுக்கு கோபம் வந்து திட்டிவிட சண்டை வருகிறது. இதில் அந்த கணவனும் ஊருக்கு கிளம்பிவிடுகிறான். அதன் பின்பு தான் நதியாவுக்கு அந்த நோட்டீஸ் வருது. அந்த கேஸை நாங்கள் உயர்நீதிமன்றத்தில் மனு போட்டு சென்னைக்கு மாற்றுகிறோம்.  ஒவ்வொரு வாய்தாவிலும், மாமனார் கோர்ட்டுக்கு வந்து பெண்ணுக்கு நகைகள் போட்டோம் என்று அடிக்கடி சொல்ல பொறுத்து பொறுத்து போன இந்த பெண்ணும் அந்த நகைகள் அனைத்தும் அவர் பெயரில் பேங்கில் அவர் தான் போட்டுள்ளார் என்று பெண் சொல்கிறார்.  மீடியேசனில், அந்த பையன் தன் அப்பா சொல்லிக் கொடுத்தது போல் எனக்கு டைவர்ஸ் வேண்டும் என்று சொல்ல பெண் டைவர்ஸ் வேண்டாம் என்கிறார். கடைசியில், குழந்தை பேரில் 25 லட்சம் பணமும் பெண்ணுக்குப் போட்ட 15 பவுன் நகை வேண்டும் என்று பெண் கோர, கடைசியில் இறங்கி ஒரு 15 லட்சம் வரை மாமனார் கொடுத்தார். இறுதியில் இருவரும் மீயுட்சுவல் கன்சண்ட்லில் விவகாரத்து பெற்றனர்.