வீடுகட்டுவதில் ஊழல்- HOUSING SCAM (UP)
உத்தரப்பிரதேச மாநிலத்தில் சமாஜ்வாடி ஆவாஸ் யோஜனா என்ற வீடுகட்டும் திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்த குடியிருப்பு திட்டத்தில் பாஜக எம்எல்சியான சரோஜினி அகர்வால் என்பவரின் கணவர் ஓம்பிரகாஷ் அகர்வால் மற்றும் அவருடைய மகள் நீமா அகர்வால் ஆகியோருக்கு சொந்தமான கம்பெனியும் ஒப்பந்தம் பெற்றிருந்தது. இந்தத் திட்டத்தின் கீழ் 10 லட்சத்துக்கு வீடு தருவதாக எம்எல்சியின் கணவரும் மகளும் ஏமாற்றியதாக குற்றம் சாட்டப்பட்டனர்.
ஹட்கோ ஊழல்- HUDCO SCAM
வீட்டுவசதி கடன் வழங்கும் நிறுவனமான ஹட்கோவில் பரிவர்த்தனை முறையில் கடன்கள் வழங்கப்பட்டன. ஆனால், இந்த கடன்கள் அனைத்தும் தவறாக பயன்படுத்தப்பட்டன. 2003 ஆம் ஆண்டு அன்றைய நகரப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் ஆனந்த்குமாருக்கு தெரிந்தே இது நடந்தது. பொதுத்துறை நிறுவனத்தில் 14 ஆயிரத்து 500 கோடி ரூபாய் அளவுக்கு கொள்ளையடிக்கப்பட்டது.
கோவாவில் வீட்டுக்கடன் ஊழல்- HOUSING LOAN SCAM (GOA)
கோவாவில் பாஜக அரசின் தொழில்துறை அமைச்சராக இருந்தவர் மகாதேவ் நாய்க். இவருடைய ஊழல் தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல்கள் அதிர்ச்சி அளித்தன. கோவா மாநில எம்எல்ஏக்களுக்கான வீடுகட்டும் திட்டத்தை இவர் மிகவும் தவறாக பயன்படுத்தினார். எம்எல்ஏக்களுக்கான வீடுகட்டும் திட்டத்தில் பெறப்பட்ட பணத்தைக் கொண்டு வணிகரீதியிலான வளாகங்களை வாங்கியிருக்கிறார். 2 சதவீத வட்டிக்கு அரசு கொடுக்கும் கடன் தொகையைக் கொண்டு வணிகரீதியிலான கட்டிடம் வாங்கியது மிகப்பெரிய விதிமீறலாகும் என்று குற்றம்சாட்டப்பட்டது.