இங்கிலாந்து நாட்டில் நடந்து வரும் உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா, நியூஸிலாந்து அணிகள் மோதி வருகின்றன. நேற்று நடந்த இந்த ஆட்டத்தில் நியூஸிலாந்து அணி 47 ஆவது ஓவர் பேட்டிங் செய்துகொண்டிருந்த போது மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் நேற்று நிறுத்தப்பட்டது.
இதனையடுத்து ரிசர்வ் டே விதிப்படி நேற்று கைவிடப்பட்ட இடத்திலிருந்து, இன்று மதியம் முதல் போட்டி தொடங்கி வருகிறது. நியூஸிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 239 ரன்கள் அடித்தது. 240 என்ற வெற்றி இலக்குடன் ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணி, ஆரம்பம் முதலே தடுமாறிய நிலையில் 5 ரன்களை சேர்ப்பதற்கு முன்னரே முதல் 3 விக்கெட்டுகளை இழந்தது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ராகுல், ரோஹித், கோலி ஆகியோர் ரன்னில் ஆட்டமிழந்தனர்.
அடுத்தடுத்து இந்திய அணியின் விக்கெட்டுகள் சரிந்த நிலையில் இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அவரது பதிவில், "மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அழுத்தத்தின் நடுவே எவ்வாறு சிங்கிள் எடுப்பது என்பதைக் கற்றுக் கொள்ள வேண்டும், தற்போது அதைச் செய்ய நாம் சிரமப்படுகிறோம். இதனால்தான் இந்த இடத்தில் அனுபவம் முக்கியமானதாக இருக்கிறது. மகி மட்டுமே நம்மை இப்போது காப்பாற்ற முடியும்" என தெரிவித்துள்ளார்.