Skip to main content

17 வயதுக்குட்பட்டவருக்கான உலக கோப்பை கால்பந்து இந்தியாவில் இன்று தொடக்கம்

Published on 06/10/2017 | Edited on 06/10/2017
17 வயதுக்குட்பட்டவருக்கான உலக கோப்பை கால்பந்து 
இந்தியாவில் இன்று தொடக்கம்

17 வயதுக்குட்பட்டவருக்கான உலககோப்பை கால்பந்து போட்டி 1985-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. சீனாவில் நடந்த இந்த போட்டியில் நைஜீரியா சாம்பியன் பட்டம் பெற்றது.

அதை தொடர்ந்து 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்தப்போட்டி நடைபெற்று வருகிறது. இதுவரை 16 முறை இந்தப்போட்டி நடந்துள்ளது. கடைசியாக 2015-ம் ஆண்டு சிலியில் நடந்த போட்டியில் நைஜீரியா கோப்பையை வென்றது. 2005 வரை உலக சாம்பியன் போட்டியாகவும், அதன்பிறகு உலக கோப்பையாகவும் நடத்தப்பட்டது .

முதல் 3 போட்டிகள் 16 வயதுக்குட்பட்ட பிரிவில் நடத்தப்பட்டது. 1999-ல் இருந்து 17 வயதுக்குட்பட்ட பிரிவாக மாற்றி நடத்தப்பட்டது.

நைஜீரியா அதிகபட்சமாக 5 முறையும், பிரேசில் 3 தடவையும், கானா, மெக்சிகோ தலா 2 முறையும், கோவியர் யூனியன், சவுதி ஆரேபியா, சுவிட்சர்லாந்து, பிரான்ஸ் தலா 1 தடவையும் பட்டம் பெற்றுள்ளன.

17-வது ஜூனியர் உலக கோப்பை கால்பந்து போட்டி (17 வயதுக்குட்பட்டோர்) முதல் முறையாக இந்தியாவில் நடத்தப்படுகிறது. இந்தப்போட்டி இன்று (வெள்ளிக்கிழமை) கோலாகலமாக தொடங்குகிறது. வருகிற 28-ந்தேதி வரை இந்தப்போட்டிகள் நடக்கிறது.

டெல்லி, கொல்கத்தா, நவி மும்பை, கொச்சி, கவுகாத்தி, கோவா ஆகிய 6 இடங்களில் இந்த போட்டிகள் நடைபெறுகிறது. இதில் 24 நாடுகள் பங்கேற்கின்றன. அவை 6 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.

‘லீக்’ முடிவில் புள்ளிகள் அடிப்படையில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘நாக்அவுட்’ சுற்றுக்கு முன்னேறும். ஒவ்வொரு பிரிவிலும் 3-வது இடத்தை பிடிக்கும் 4 சிறந்த அணிகளும் தகுதி பெறும். நாக்அவுட் சுற்றுக்கு 16 அணிகள் நுழையும்.

இந்தப்போட்டியில் பங்கேற்கும் நாடுகளும், அவை இடம் பெற்றுள்ள பிரிவுகளும் வருமாறு:-

இந்தியா, அமெரிக்கா, கொலம்பியா, கானா (‘ஏ’ பிரிவு), பராகுவே, நியூசிலாந்து, துருக்கி, மாலி (பி), பிரிவில் ஜெர்மனி, ஈரான், கினியா, கோஸ்டாரிகா (சி), பிரிவில் பிரேசில், ஸ்பெயின், வடகொரியா, நைஜர் (டி), பிரான்ஸ், ஜப்பான், ஹோண்டுராஸ், நியூ கெல்டோனியா (இ), பிரிவில் இங்கிலாந்து, ஈரான், மெக்சிகோ, சிலி (எப்).

நடப்பு சாம்பியனான நைஜீரியா இந்தபோட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்துவிட்டது.

சார்ந்த செய்திகள்