இலங்கை, தென் ஆப்பிரிக்க அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி இன்று டர்பன் மைதானத்தில் தொடங்கியது. முதல் நாளான இன்று டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்தது. அதன்படி முதல் ஓவரை இலங்கை வேகப்பந்து வீச்சாளர் விஸ்வா பெர்னாண்டோ வீசினார். அதன் 4 வது பந்தில் டீன் எல்கர் ஆட்டமிழந்து வெளியேறினார்.
அதனை தொடர்ந்து அடுத்த பந்திலேயே ஆம்லா லெக் பேடில் பந்துவீச்சாளர் வீசிய பந்து பட்ட நிலையில் இலங்கை அணியில் உள்ள அனைவரும் அப்பீல் செய்தனர். ஆனால் நடுவர் இதற்கு அவுட் தராததால் அவர்கள் ஆலோசனைக்கு பின் டி.ஆர்.எஸ் முறைக்கு சென்றனர். ஆனால் நடுவர் அதனையும் ஏற்கவில்லை.
அவர்கள் டி.ஆர்.எஸ் குறித்து முடிவு எடுக்க 15 வினாடிகளுக்கு மேல் எடுத்து கொண்டதாக கூறி அந்த அப்பீலை ஏற்க மறுத்தார். ஆனால் வர்ணனையாளர் கூறும் போது 13 வினாடிகளே ஆகியதாக கூறினார். வீரர்களும் நடுவரின் இந்த தீர்ப்பை ஏற்க மறுத்தனர். மேலும் 10 விநாடிகள் முடிந்தவுடன் நடுவர் சிக்னல் தர வேண்டும், அதனையும் அவர் தரவில்லை என்பதால் அந்த இடத்தில சிறிது நேரம் குழப்பம் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து தென் ஆப்பிரிக்கா அணி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.