இங்கிலாந்து கவுண்டி அணியில் விளையாட இந்திய அணியின் ஸ்மிரிதி மந்தானா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்திய அணியில் இருந்து ஒருவர் இங்கிலாந்து கவுண்டியில் விளையாட இருப்பது இதுவே முதல்முறையாகும்.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் தொடக்க வீரர் ஸ்மிரிதி மந்தானா. இடதுகை ஆட்டக்காரரான இவர் சமீபத்தில் நடந்துமுடிந்த உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் அதிரடியாக ஆடி, பிரபலமடைந்தவர். சமீபத்தில் பெண்களுக்கான ஐ.பி.எல். முன்னோட்ட போட்டியில் ட்ரெய்ல் ப்ளேஸர்ஸ் என்ற அணிக்கு ஸ்மிரிதி தலைமை தாங்கினார்.
இந்நிலையில், இங்கிலாந்தில் நடக்கவிருக்கும் கியா சூப்பர் லீக் எனும் மகளிர் கிரிக்கெட் டி20 தொடரில் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஆறு அணிகள் களமிறங்கும் இந்தத் தொடரில், ஸ்மிரிதி மந்தானா வெஸ்டெர்ன் ஸ்டோர்ம் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
21 வயதே நிரம்பிய ஸ்மிரிதி மந்தானா, 40 டி20 போட்டிகளில் 826 ரன்கள் விளாசியுள்ளார். இந்திய அணியில் இருந்து முதல்முதலாக இங்கிலாந்து கவுண்டியில் ஆடும் பெருமை பெரிதும் மகிழ்ச்சியளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.