Published on 22/06/2021 | Edited on 22/06/2021

இந்தியா கிரிக்கெட் அணி மற்றும் நியூசிலாந்து அணிக்கு இடையேயான ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் இறுதி போட்டி 2021 இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது.
சௌத்தாம்டனில் நடைபெற்று வரும் கிரிக்கெட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் விளையாடிய இந்திய அணி 10 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்களை எடுத்தது. அதைத் தொடர்ந்து விளையாடிய நியூசிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 249 ரன்களை எடுத்தது.
இந்திய அணி தரப்பில் இஷாந்த் சர்மா 3 விக்கெட்டுகளையும், முகமது ஷமி 4 விக்கெட்டுகளையும், ரவிச்சந்திரன் அஸ்வின் 2 விக்கெட்டுகளையும், ரவீந்திர ஜடேஜா 1 விக்கெட்டையும் எடுத்தனர்.
நியூசிலாந்து அணி தரப்பில் அதிகபட்சமாக டெவோன் கான்வே 54, கேன் வில்லியம்சன் 49 ரன்களை எடுத்தனர். முதல் இன்னிங்ஸின் படி நியூசிலாந்து அணி 32 வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளது.