Skip to main content

ஆட்டநாயகன் விருது அம்பயருக்கு கொடுக்கப்பட்டிருக்க வேண்டும் -சேவாக் காட்டம்!

Published on 21/09/2020 | Edited on 21/09/2020

 

Sehwag

 

டெல்லி மற்றும் பஞ்சாப் அணிகள் மோதிய போட்டியில், களத்தில் இருந்த நடுவரின் செயல்பாடு குறித்து இந்திய அணியின் மூத்த வீரர் சேவாக் அதிருப்தி தெரிவித்துள்ளார். 

 

ஐ.பி.எல் போட்டியின் இரண்டாம் நாளான நேற்று, டெல்லி மற்றும் பஞ்சாப் அணிகள் துபாய் சர்வதேச மைதானத்தில் மோதின. கடைசி பந்து வரை பரபரப்புடன் நடந்த இப்போட்டியில், 20 ஓவர் முடிவில் இரு அணிகளும் சமநிலை வகித்தன. வெற்றியைத் தீர்மானிக்க நடைபெற்ற சூப்பர் ஓவரில் டெல்லி அணி அபாரமாக வெற்றி பெற்றது.

 

இப்போட்டியில், இரண்டாவது நடுவராக நிதின் மேனன் செயல்பட்டார். அவர் அளித்த ஒரு தவறான முடிவு பஞ்சாப் அணியின் வெற்றி வாய்ப்பையே பறித்துள்ளது. ஆட்டத்தின் 19 -ஆவது ஓவரில் டெல்லி அணி வீரர் ரபடா வீசிய பந்தை அடித்துவிட்டு, பஞ்சாப் அணி வீரர் கிறிஸ் ஜோர்டன் இரண்டு ரன்கள் எடுக்க முயற்சித்தார். அப்போது களத்தில் இருந்த நடுவர் நிதின் மேனன், முதல் ரன்னை முழுமையாக முடிக்கவில்லை என்று கூறி ரன்கள் வழங்க மறுத்தார். பின்பு டீவி ரீஃபிளேயில் பார்க்கும் போது, முறைப்படி கிரிக்கெட் விதிகளுக்கு உட்பட்டு தான் இரண்டாம் ரன்னிற்கு கிறிஸ் ஜோர்டன் முயற்சித்தது தெரியவந்தது. நடுவரின் இந்த முடிவால் பஞ்சாப் அணி ரசிகர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

 

இது குறித்து தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் கருத்துத் தெரிவித்துள்ள சேவாக், "ஆட்ட நாயகன் விருது தேர்வில் எனக்கு உடன்பாடில்லை. முறைப்படி அது நடுவருக்குத்தான் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும்" எனப் பதிவிட்டுள்ளார்.. 

 

Ad

 

மேலும் பஞ்சாப் அணியின் உரிமையாளரான பிரீத்தி ஜிந்தா, சேவாக்கின் இப்பதிவை மேற்கோள் காட்டி, "நோய்த்தொற்று அச்சுறுத்தல் நிறைந்த இச்சூழலிலும் மிக ஆர்வமாகக் கிளம்பி வந்தேன். 6 நாட்கள் தனிமை, 5 முறை கரோனா பரிசோதனை எல்லாவற்றையும் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டேன். நடுவரின் இந்த முடிவு அதிருப்தி அளிக்கிறது. இது போன்ற நேரங்களில் உதவாத தொழில்நுட்பம் எதற்கு?. இது வருடாவருடம் தொடரக்கூடாது. பி.சி.சி.ஐ இது குறித்து புது விதியை அமல்படுத்த வேண்டும்" எனப் பதிவிட்டுள்ளார். 

 

 

 

Next Story

வரம்பு மீறிய சேவாக்! பக்குவமாக நடந்து கொண்ட மேக்ஸ்வெல்...

Published on 20/11/2020 | Edited on 20/11/2020

 

Glenn Maxwell

 

 

13-ஆவது ஐபிஎல் தொடரானது அமீரகத்தில் நடைபெற்றது. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த அதிரடி வீரரான மேக்ஸ்வெல், கே.எல்.ராகுல் வழிநடத்திய பஞ்சாப் அணிக்காக விளையாடினார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மேக்ஸ்வெல், 13 போட்டிகளில் விளையாடி 103 ரன்கள் மட்டுமே குவித்தார். மேலும், அதிரடிக்கு பெயர் பெற்ற இவர் நடப்பு ஐபிஎல் தொடரில் ஒரு சிக்ஸர் கூட அடிக்கவில்லை. இதனையடுத்து, அவர் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.

 

இந்திய அணியின் முன்னாள் வீரரான சேவாக் தன்னுடைய யூ-டியூப் சேனலில் பேசும்போது, மேக்ஸ்வெல்லை  விலையுயர்ந்த சியர்ஸ்லீடர் என்றும், அதிகம் ஊதியம் பெற்று விடுமுறையில் இருப்பவர் என்றும் குறிப்பிட்டார். சேவாக்கின் இந்தக் கருத்திற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். 

 

இந்நிலையில், ஆஸ்திரேலிய நாளிதழ் ஒன்றிற்கு சமீபத்தில் பேட்டியளித்த மேக்ஸ்வெல், "என்னை விரும்பாததை சேவாக் வெளிப்படையாகக் கூறிவிட்டார். அவர் கூற விரும்புவதைக் கூற அவருக்கு உரிமை உள்ளது. நான் அதை கடந்து போகிறேன். இதை ஒரு நகைச்சுவையாக எடுத்துக் கொள்கிறேன். இது போன்ற விமர்சனங்களைக் கையாள்வதில் நான் கைத்தேர்ந்துவிட்டேன் என்று நினைக்கிறேன்" எனக் கூறினார்.

 

 

Next Story

ரோகித் ஷர்மாவை உருவகேலி செய்தாரா? சர்ச்சையான சேவாக் பேச்சு...

Published on 27/10/2020 | Edited on 27/10/2020

 

Rohit Sharma

 

 

ரோகித் ஷர்மா குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக் கூறிய கருத்து புது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

 

இந்திய அணியின் முன்னாள் வீரரான சேவாக்  ‘Viru ki Baithak' என்ற பெயரில் முகநூலில் ஒரு நிகழ்ச்சி நடத்தி வருகிறார். அதில், ஐபிஎல் போட்டிகளில் அணிகளின் செயல்பாடு, வீரர்களின் செயல்பாடு மற்றும் வெற்றி, தோல்விக்கான காரணங்கள் குறித்து நகைச்சுவையாக அலசுகிறார். அந்த நிகழ்ச்சியில் ரோகித் ஷர்மா குறித்து சேவாக் கூறிய கருத்து சர்ச்சையாக வெடித்துள்ளது.

 

காயம் காரணமாக மும்பை அணியின் கேப்டனான ரோகித் ஷர்மா கடந்த இரு போட்டிகளில் விளையாடவில்லை. இதுகுறித்து பேசிய சேவாக், ரோகித் ஷர்மா விளையாடவில்லை, வடபாவ் காயமடைந்தால் என்ன? அவர் இடத்தை சமோசாபாவ் எடுத்துக்கொண்டது என சவுரப் திவாரியை குறிப்பிட்டார்.

 

சேவாக்கின் இந்த கருத்தானது உருவகேலி செய்யும் வகையில் உள்ளது என்று கூறி பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.