Published on 11/11/2020 | Edited on 11/11/2020

அமீரகத்தில் நடைபெற்று வந்த 13-ஆவது ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. மும்பை மற்றும் டெல்லி அணிகள் மோதிய இப்போட்டியில், 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்ற மும்பை அணி 5-ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரரும், வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்சுரேக்கர், சென்னை அணி இல்லாத பிளேஆஃப் போட்டிகள் குறித்து கருத்த் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்வீட்டர் பதிவில், "ஒரு கிரிக்கெட் பிரியராக இந்தாண்டு சென்னை அணியை தவறவிடுகிறேன். சென்னை அணி பிளேஆஃப் சுற்றில் இடம்பிடித்து, மும்பை அணியின் கோப்பை வெல்லும் வாய்ப்பை கடினப்படுத்த வேண்டும் என்று விரும்பினேன். சென்னை அணி இருந்திருந்தால், தொடரின் இறுதியில் பரபரப்பான போட்டியை பார்க்க நேர்ந்திருக்கும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.