
டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 1 ரன் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெற்றிபெற்றது.
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் நேற்றைய போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதின. குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்று (27/04/2021) இரவு 07.30 மணிக்கு நடைபெற்ற போட்டியில், முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 171 ரன்களை எடுத்தது.

அதைத் தொடர்ந்து 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி, 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 170 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தரப்பில் அதிகபட்சமாக டி வில்லியர்ஸ் 75, மேக்ஸ்வெல் 25 ரன்களை எடுத்தனர். அதேபோல், டெல்லி அணி தரப்பில் அதிகபட்சமாக ரிஷப் பந்த் 58, ஷிம்ரான் ஹெட்மியர் 53 ரன்களை எடுத்தனர். சிறப்பாக விளையாடிய டி வில்லியர்ஸ் ஆட்டநாயகன் விருதை வென்றார்.