Skip to main content

மோசமான சாதனைப் பட்டியலில் இணைந்த ரோகித் ஷர்மா!

Published on 06/11/2020 | Edited on 06/11/2020

 

Rohit Sharma

 

 

ஐபிஎல் போட்டிகளில் அதிக முறை டக்-அவுட்டாகிய வீரர்கள் பட்டியலில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனான ரோகித் ஷர்மா இணைந்துள்ளார்.

 

அமீரகத்தில் நடைபெற்று வரும் 13-ஆவது ஐபிஎல் தொடரின் முதல் தகுதிசுற்று போட்டி நேற்று நடைபெற்றது. மும்பை மற்றும் டெல்லி அணிகள் மோதிய இப்போட்டியில், மும்பை அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, ஆறாவது முறையாக இறுதி போட்டிக்குள் நுழைந்துள்ளது.

 

இப்போட்டியில் மும்பை அணியின் கேப்டனான ரோகித் ஷர்மா, ரன் ஏதும் எடுக்காமல் சந்தித்த முதல் பந்திலேயே ஆட்டம் இழந்தார். டெல்லி அணி வீரர் அஷ்வின் வீசிய பந்தில் எல்.பி.டபிள்யு முறையில் தன் விக்கெட்டைப் பறிகொடுத்த ரோகித் ஷர்மா ஐபிஎல் போட்டிகளில் டக்-அவுட்டாவது இது 13-ஆவது முறையாகும்.

 

இதன்மூலம், அதிக முறை டக்-அவுட்டாகிய வீரர்கள் பட்டியலில் மும்பை அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா இணைந்துள்ளார். பார்த்தீவ் படேல் மற்றும் ஹர்பஜன் சிங் ஆகிய இருவீரர்கள் தலா 13 முறை டக் அவுட்டாகி இப்பட்டியலில் இடம் பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.