இந்தியாவில் நடைபெற்றுவரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் போல பாகிஸ்தானில் ஆண்டுதோறும் நடக்கும் கிரிக்கெட் தொடர் பி.எஸ்.எல் கிரிக்கெட் தொடர். இந்திய நிறுவனமான ரிலையன்ஸ் நிறுவனமும், ஐ.எம்.ஜி நிறுவனமும் இந்த தொடருக்கு ஸ்பான்சர் வழங்கி தயாரித்து வந்தன. மேலும் உலக அளவில் தொலைக்காட்சி ஒளிபரப்பு ஆகியவற்றை ஒருங்கிணைத்து வந்தன. இந்நிலையில் புல்வாமாவில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ரிலையன்ஸ் நிறுவனம் இதுவரை வழங்கி வந்த ஸ்பான்சரை நிறுத்திக்கொள்வதாக அறிவித்துள்ளது.
இதனால் அந்நாட்டின் மிக பெரிய கிரிக்கெட் தொடராக கருதப்படும் பி.எஸ்.எல் தொடர் இனி உலகம் முழுவதும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பபடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஸ்பான்ஸர் விலகியதால் அந்த தொடர் நடைபெறுமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. ரிலையன்ஸ் நிறுவனம் பி.எஸ்.எல் தொடருக்கு தயாரிப்பு பங்குதாரராகவும், போட்டிகள் நடப்பது, போட்டி ஒளிபரப்பு, விளம்பரம் என அனைத்தையும் ஐஎம்ஜி - ரிலையன்ஸ் நிறுவனத்துடன் ஒருங்கிணைத்து நடத்தி வந்தது. மேலும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் இந்த அறிவிப்பால் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் மிகப்பெரிய நஷடத்தை சந்திக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.