
13-வது ஐபிஎல் தொடர் அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இத்தொடரின் 15-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன. போட்டி நடைபெறும் அபுதாபியில் 34 டிகிரியில் வெயில் கொளுத்துகிறது. இந்நிலையில், டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது. 10 ஓவர் முடிவில் ராஜஸ்தான் அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 67 ரன்கள் எடுத்துள்ளது. 4வது ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்தது ராஜஸ்தான் அணி. வெயிலின் உஷ்ணம் அதிகமாக இருப்பதே இதற்கு காரணம் என கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். அங்கு 42 செல்சியஸ் வெப்பம் உணரப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் தொடர் தொடங்கியதிலிருந்தே அங்குள்ள கால நிலையைச் சமாளிக்க முடியாமல் வீரர்கள் தடுமாறி வருகின்றனர். நேற்று நடைபெற்ற சென்னை மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டியின் போது, வெயிலின் தாக்கத்தால் தோனி கடுமையாக தடுமாறியதும் குறிப்பிடத்தக்கது.