கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்கள் ஏலம் பெங்களூருவில் தொடங்கியது. சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேபிட்டல்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், சன் ரைசஸ் ஹைதராபாத் உள்ளிட்ட 10 அணிகளுக்கு இன்றும், நாளையும் நடக்கும் ஏலத்தில் 590 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.
ஐ.பி.எல். அணிகளில் அதிகபட்சமாக பஞ்சாப் அணியிடம் ரூபாய் 72 கோடி இருப்புத்தொகை உள்ளது. வீரர்களை ஏலம் எடுக்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் ரூபாய் 48 கோடி இருப்புத்தொகை உள்ளது. 14 உள்நாட்டு வீரர்கள், 7 வெளிநாட்டு வீரர்களை ஏலம் எடுக்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வாய்ப்புள்ளது. இளம் வீரர் ஷாருக்கானை ஏலம் எடுக்கும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உள்ளது.
மகேந்திர சிங் டோனி, ரவீந்திர ஜடேஜா, ருதுராஜ் கெய்க்வாட், மொயின் அலி ஆகியோரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தக்க வைத்துள்ளது.
இளையோர் உலகக்கோப்பை கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடிய வீரர்களை ஏலத்தில் எடுக்க அணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.