Published on 30/11/2018 | Edited on 30/11/2018

இந்தியா,ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் தொடர் வரும் டிசம்பர் 6-ம் தேதி அடிலெய்டில் தொடங்க உள்ளது. இந்நிலையில் சிட்னியில் ஆஸ்திரேலிய லெவன் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டம் நடைபெற்று வருகிறது. இதில் சிறப்பாக பேட்டிங் ஆடிய இந்திய அணி 348 ரன்கள் எடுத்தது. பின்னர் இந்திய அணி பந்துவீசிய பொழுது ஃபில்டிங் செய்த பிரித்வி ஷாவுக்கு காயம் ஏற்பட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இதனால் அவர் அடுத்தடுத்த போட்டிகளில் விளையாடுவது குறித்து சந்தேகம் எழுந்துள்ளது.