Published on 24/10/2020 | Edited on 24/10/2020

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் மருத்துவமனையில் சிகிச்சை எடுக்கும் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான கபில் தேவ், 1983-ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியை வழிநடத்தியவர் ஆவார். கிரிக்கெட்டிலிருந்து முழுமையாக ஓய்வு பெற்ற அவர், கிரிக்கெட் போட்டிகளுக்கான வர்ணனை செய்வதில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், 62 வயதான கபில் தேவுக்கு நேற்று முன்தினம் லேசான நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. அதனையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. மேலும், கபில் தேவ் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் நேற்று அறிக்கை வெளியிட்டது.
இந்நிலையில், கபில் தேவ் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வரும் புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.