Skip to main content

மீண்டும் உலக சாதனை படைத்த ‘ஹிட்’மேன்!

Published on 13/12/2017 | Edited on 13/12/2017
மீண்டும் உலக சாதனை படைத்த ‘ஹிட்’மேன்!

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் வரலாற்றிலேயே மூன்று இரட்டை சதங்களை அடித்த ஒரே வீரர் என்ற சாதனையை ரோகித் சர்மா படைத்துள்ளார்.



மொகாலியில் நடைபெற்று வரும் இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 153 பந்துகளைச் சந்தித்த ரோகித் சர்மா 208 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் மூன்று முறை இரட்டை சதங்கள் அடித்த வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். இதில் 13 பவுண்டரிகளும், 12 சிக்ஸர்களும் அடக்கம். 

இதற்கு முன்னர் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 2013ஆம் ஆண்டு நடைபெற்ற ஆட்டத்திலும், 2014ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிராக 2014ஆம் ஆண்டு நடைபெற்ற ஆட்டத்திலும் ரோகித் சர்மா இரட்டை சதம் அடித்திருந்தார். இலங்கைக்கு எதிரான போட்டியில் ரோகித் சர்மா 264 ரன்கள் எடுத்திருந்ததே தற்போது வரை உலக அளவில் ஒருநாள் போட்டிகளில் அதிகபட்ச ரன்கள் ஆகும்.

இந்திய அணியின் சார்பில் சச்சின் தெண்டுல்கர், வீரேந்தர் சேவாக் ஆகியோர் இதற்கு முன்னர் இரட்டை சதம் அடித்திருந்தனர். மேலும், இந்த ஆண்டு இந்திய அணியின் சார்பில் களமிறங்கிய ரோகித் சர்மா, கலந்துகொண்ட அனைத்து ஒருநாள் தொடர்களிலும் சதம் அடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

சார்ந்த செய்திகள்