Published on 15/12/2021 | Edited on 15/12/2021

மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், இன்று (15.12.2021) மகளிருக்கான கேலோ இந்தியா ஹாக்கி போட்டியைத் தொடங்கிவைத்தார். அப்போது அவரிடம் ரோகித் சர்மா - விராட் கோலி இடையே கேப்டன்சி விவகாரத்தில் மோதல் ஏற்பட்டுள்ளதாக வெளியான தகவல்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்குப் பதிலளித்த அனுராக் தாக்கூர், "விளையாட்டுதான் மிக உயர்ந்தது. விளையாட்டைவிட யாரும் உயர்ந்தவர்கள் அல்ல. எந்த வீரர்களிடையே என்ன நடக்கிறது என்பதை என்னால் கூற முடியாது. அது சம்பந்தப்பட்ட கூட்டமைப்புகள் / சங்கங்களின் வேலை. அவர்கள் இதுகுறித்து பேசினால் நன்றாக இருக்கும்" எனக் கூறியுள்ளார்.
விராட் கோலி - ரோகித் சர்மா இடையே எந்த மோதலும் இல்லை என பிசிசிஐ பொருளாளர் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.