டென்னிஸ் தரவரிசையில் நடால் மீண்டும் முதலிடம்
சர்வதேச டென்னிஸ் தரவரிசையில் மீண்டும் முதலிடம் பிடித்திருப்பதை நம்ப முடியவில்லை என்று, ஸ்பெயின் டென்னிஸ் வீரர் ரஃபேல் நடால் தெரிவித்துள்ளார். 2014 ஆம் ஆண்டு முதல் காயம் மற்றும் மோசமான ஃபார்ம் காரணமாக மிகப்பெரிய சரிவை நடால் சந்தித்தார். எனினும் தொடர்ந்து போராடிய நடால் 2017 ஆம் ஆண்டு பிரெஞ்சு ஓபன் உள்ளிட்ட முக்கிய போட்டிகளில் சாம்பியன் பட்டம் வென்றார். சின்சினாட்டி மாஸ்டர்ஸ் போட்டியில் காலிறுதிவரை முன்னேறியதன் மூலம் மீண்டும் தரவரிசையில் அவர் முதலிடத்தைப் பிடித்திருக்கிறார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள நடால், சில ஆண்டுகளாக பின்னடைவை சந்தித்த நிலையில், தரவரிசையில் மீண்டும் முதலிடத்தைப் பிடித்திருப்பதை நம்ப முடியவில்லை என்று கூறினார்.