Skip to main content

பும்ராவை நினைத்து கவலைகொள்கிறேன் - ஆஸி. ஜாம்பவன் ஆலன் பார்டர் ஓப்பன் டாக்! 

Published on 16/12/2020 | Edited on 16/12/2020

 

jasprit bumrah

 

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர், நாளை தொடங்குகிறது. இரு அணிகளும் நாளை பகலிரவு ஆட்டத்தில் மோதவுள்ளனர்.

 

இந்தநிலையில், ஆஸ்திரேலியா அணியின் ஜாம்பவான் ஆலன் பார்டர் இந்தத் தொடர் குறித்து ஒரு பேட்டியில் பேசுகையில், பும்ராவை பற்றி பயம் கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.

 

இதுகுறித்து அவர், "நான் பும்ராவின் மிகப்பெரிய ரசிகன். நான் அவர் குறித்து கவலைப்படுகிறேன், ஏனென்றால் எங்கள் பிட்ச்களில்  கொஞ்சம் பவுன்ஸ் இருக்கும். மேலும், பந்து பக்கவாட்டில் மூவ் ஆகும். கடந்த முறை அவர், சிறப்பாக ஆடி முக்கியமான விக்கெட்டுகளை எடுத்தால், இரு அணிகளுக்கும் இடையேயான வித்தியாசமாய் அவர் இருப்பார்" எனக் கூறியுள்ளார்.

 


மேலும், "பும்ரா முகத்தில் எப்போதும் சிரிப்பு இருக்கும். ஆனால், பந்துவீச்சு ரிதத்தைப் பெற்றுவிட்டால் மிகவும் ஆபத்தானவராக மாறிவிடுவார்" என ஆலன் பார்டர் கூறியுள்ளார்.

 

கடந்த இந்தியா-ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில், 4 போட்டிகளில் 21 விக்கெட்டுகள் எடுத்து, இந்தியா அணி தொடரை வெல்ல முக்கிய பங்கு வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Next Story

சிறு தவறால் இந்தியாவின் கைமீறிச் சென்ற போட்டி; வலுவான நிலையில் ஆஸி!

Published on 01/03/2023 | Edited on 01/03/2023

 

A match that went out of India's hands due to a small mistake; Aussie in a strong position

 

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இந்திய அணி முதல் இரு போட்டிகளில் வெற்றி பெற்ற நிலையில் மூன்றாவது போட்டி இந்தூரில் இன்று தொடங்கியது.

 

இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர் கே.எல்.ராகுலுக்கு பதிலாக சுப்மன்கில் சேர்க்கப்பட்டார். பந்துவீச்சிலும் ஷமிக்கு பதிலாக உமேஷ் யாதவ் சேர்க்கப்பட்டார். டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணியின் வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேறினர். தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மா 12 ரன்களுக்கும், சுப்மன் கில் 21 ரன்களுக்கும் அடுத்தடுத்து வெளியேற புஜாரா (1), ஜடேஜா (4), ஸ்ரேயாஸ் ஐயர் (0), கே.எஸ்.பரத் (17) என வேகமாக வெளியேறினர். ஒரு கட்டத்தில் அனைத்து விக்கெட்களையும் இழந்த இந்திய அணி 109 ரன்களை மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக விராட் கோலி 22 ரன்களும் சுப்மன் கில் 21 ரன்களையும் எடுத்தனர். சிறப்பாக பந்து வீசிய ஆஸ்திரேலியாவின் ஹுன்னாமன் 5 விக்கெட்களையும் நாதன் லியன் 3 விக்கெட்களையும் மர்பி 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். 

 

தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை ஆடிய ஆஸியின் தொடக்க ஆட்டக்காரர் ட்ராவிஸ் ஹெட் 9 ரன்களில் ஆட்டமிழந்தாலும் உஸ்மான் கவாஜா நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவருடன் இணைந்து லபுசானே மற்றும் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் ரன்களை சேர்த்தனர். முதல் நாள் முடிவில் ஆஸி அணி 156 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்திருந்தது. அதிகபட்சமாக கவாஜா 60 ரன்களையும் லபுசானே 31 ரன்களையும் ஸ்டீவ் ஸ்மித் 26 ரன்களையும் எடுத்திருந்தனர். களத்தில் கேமரூன் க்ரீன் மற்றும் பீட்டர் ஹேண்ட்ஸ்கோப் இருந்தனர். ஆஸி கொடுத்த 4 விக்கெட்களையும் இந்திய ஆல்ரவுண்டர் ஜடேஜா கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. தற்போது ஆஸி அணி 47 ரன்கள் முன்னிலையில் உள்ளது.

 

ஆஸி இன்னிங்ஸின் 4 ஆவது ஓவரை ஜடேஜா வீசினார். க்ரீஸில் லபுசானே ஆடிக்கொண்டு இருந்தார். அந்த ஓவரில் லபுசானே போல்ட் ஆனார். இந்திய அணியின் கட்டுக்குள் ஆட்டம் வந்தது என நினைக்கும் பொழுது, ஜடேஜா வீசிய பந்தை நோ பால் என நடுவர் அறிவித்தார். இதனால் விக்கெட்டில் இருந்து தப்பிய லபுசானே., கவாஜா உடன் இணைந்து 50 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

 

Next Story

பும்ரா மீது அதிருப்தி; ஹர்திக் பாண்டியா குறித்து விளக்கம் கேட்கத் தயாராகும் பிசிசிஐ!

Published on 08/11/2021 | Edited on 08/11/2021

 

hardhik pandya and jasprit bumrah

 

2021 ஆம் ஆண்டிற்கான இருபது ஓவர் உலககோப்பை போட்டியில், கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளுள் ஒன்றாக கருதப்பட்ட இந்திய அணி, அரையிறுதிக்கு கூட தகுதி பெறாமல் வெளியேறி,ரசிகர்களுக்கு அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் அளித்துள்ளது.

 

இந்தநிலையில் இந்த தோல்வியால் பிசிசிஐ கடும் அதிருப்தியில் உள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேபோல் முழு உடல் தகுதி இல்லாததால் ஐபிஎல்-லில் பந்து வீசாமல் இருந்த ஹர்திக் பாண்டியா, தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு அனுப்பப்படாமல் இந்திய உலகக்கோப்பை அணிக்கு தேர்வு செய்யப்பட்டது குறித்தும், இந்திய அணியில் அவர் தொடர்ந்து இடம்பெற்றது குறித்தும் தேர்வு குழுவிடமும், அணி நிர்வாகத்திடமும் பிசிசிஐ விளக்கம் கேட்கவுள்ளதாகவும் பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும் அடுத்து நடைபெறவுள்ள நியூசிலாந்து தொடருக்கான இந்திய அணியில் இருந்தும் ஹர்திக் பாண்டியா நீக்கப்படவுள்ளார் எனவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

 

இதற்கிடையே பும்ரா மீதும் பிசிசிஐ அதிருப்தியில் உள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. நியூசிலாந்துக்கு எதிரான போட்டிக்கு பிறகு அணி வீரர்களுக்கு ஓய்வு தேவை என பும்ரா கூறியது பிசிசிஐக்கு அதிருப்தி ஏற்படுத்தியுள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பிசிசிஐயின் மூத்த அதிகாரி ஒருவர், "பயோ-பபிள் சோர்வைப் பொறுத்தவரை, ஐபிஎல்லில் விளையாடுமாறு வீரர்கள் கட்டாயப்படுத்தப்படவில்லை. விராட் அல்லது ஜஸ்பிரிட் உலகக் கோப்பை மிகவும் முக்கியமானது என்று நினைத்திருந்தால், அவர்கள் ஐபிஎல்லில் இருந்து விலகியிருக்கலாம். பிசிசிஐ அவர்களுக்கு அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்தது. குடும்பத்தினர் அவர்களுடன் இருக்கவும் அனுமதித்துள்ளது" என கூறியுள்ளார்.