உலகக்கோப்பையில் இன்று நடந்து வரும் ஆட்டத்தில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. இதனை அடுத்து தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கிய ரோஹித் ஷர்மா 18 ரன்களிலும், ராகுல் 48 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
இந்நிலையில் அடுத்து வந்த கேப்டன் கோலி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில் சர்வதேச போட்டிகளை 20,000 ரன்களை கடந்து சாதனையை படைத்துள்ளார். இதனை குறைந்த போட்டிகளில் சாதித்தவர் என்ற சாதனையையும் கோலி படைத்துள்ளார்.
இதற்கு முன்பு 453 போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் பிரையன் லாரா 20,000 ரன்களை கடந்ததே அதிகபட்ச சாதனையாக இருந்தது. அதற்கு அடுத்த இடத்தில் சச்சின் இருந்தார். தற்போது இவர்கள் இருவரையும் பின்னுக்கு தள்ளி 417 போட்டிகளில் 20,000 ரன்களை கடந்தவர் என்ற சாதனையை படைத்துள்ளார். மேலும் சர்வதேச அளவில் 20,000 ரன்களை 12 ஆவது வீரர் மற்றும் மூன்றாவது இந்திய வீரர் என்ற பெருமையை கோலி பெற்றுள்ளார்.