
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வெற்றி பெற 188 ரன்களை இலக்காக நிர்ணயித்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சிதம்பரம் மைதானத்தில் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இன்று இரவு 07.30 மணிக்கு நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 187 ரன்களை எடுத்தது. கொல்கத்தா அணி தரப்பில் அதிகபட்சமாக நிதிஷ் ராணா 80, ராகுல் திரிபாதி 53, தினேஷ் கார்த்திக் 22 ரன்களை எடுத்தனர்.

ஹைதராபாத் அணி தரப்பில் முகமது நபி 2, ரஷீத் கான் 2, நடராஜன், புவனேஷ்வர் குமார் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். அதைத் தொடர்ந்து, 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் விளையாடி வருகிறது.