Published on 28/01/2019 | Edited on 28/01/2019

இந்தியா நியூஸிலாந்து அணிகள் மோதும் மூன்றாவது ஒருநாள் போட்டி பே ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. 60 ரன்களுக்குள் மூன்று விக்கெட்டுகளை இழந்து மோசமான நிலையில் இருந்த நியூஸிலாந்து அணியை ராஸ் டெய்லர் மற்றும் டாம் லத்தெம் ஜோடி சரிவிலிருந்து மீட்டது. சிறப்பாக விளையாடிய ராஸ் டெய்லர் 93 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். டாம் லத்தெம் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனை தொடர்ந்து 49 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த நியூஸிலாந்து அணி 243 ரன்கள் எடுத்தது. இதனை தொடர்ந்து 244 ரன்கள் என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடி வருகிறது. இந்திய அணியில் சிறப்பாக பந்துவீசிய முகமது ஷமி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.