இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று 2-0 என கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் இந்த இரு அணிகளுக்கு இடையிலான 3-வது ஒரு நாள் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சி கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று இந்திய அணி பந்துவீச தீர்மானித்தது. அதனை தொடர்ந்து பேட்டிங்கை தொடங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய கேப்டன் ஆரோன் பிஞ்ச், உஸ்மான் கவாஜா ஆகியோர் ஜோடி சிறப்பாக விளையாடி முதல் விக்கெட்டுக்கு 193 ரன்கள் சேர்த்தது. குல்தீப் யாதவ் பந்துவீச்சில் எல்பிடபுள்யூ ஆகிய பிஞ்ச் 93 ரன்களில் ஆட்டமிழந்து சதம் அடிக்கும் வாய்ப்பைத் தவறவிட்டார். அதன்பின் கவாஜா 104 ரன்களும், மேக்ஸ்வெல் 47 ரங்களும் எடுத்தனர். இறுதியில், ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 313 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.. 314 என்ற கடின இலக்குடன் இந்திய அணி தனது ஆட்டத்தை தொடங்கவுள்ளது.