
மேற்கு வங்கம் மாநிலம், கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டி இன்று (21/11/2021) இரவு 07.00 மணிக்கு நடைபெற்றது.
முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்து விளையாடிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 184 ரன்களை எடுத்தது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக ரோஹித் சர்மா 56, இஷான் கிஷன் 29, ஸ்ரேயாஸ் ஐயர் 25 ரன்களை எடுத்தனர்.

அதைத் தொடர்ந்து, 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி 17.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 111 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. இதனால் 73 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை வென்று ஒயிட்வாஷ் செய்தது இந்திய அணி.