Skip to main content

சாம்பியன்ஸ் ட்ரோஃபி ஹாக்கி இறுதிப்போட்டி - இந்தியா தோல்வி

Published on 02/07/2018 | Edited on 02/07/2018

சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி இறுதிப்போட்டியில் இந்தியாவை வீழ்த்தி கோப்பையை தக்கவைத்துக் கொண்டது ஆஸ்திரேலிய அணி. 

hockey

 

 

 

சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடர் நெதர்லாந்து நாட்டில் நடைபெற்று வந்தது. இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியாவும் இந்தியாவும் மோதின. தொடக்கத்தில் ஆஸ்திரேலிய அணியின் கைகள் ஓங்கியிருந்தன. ஆட்டத்தின் 24ஆவது நிமிடத்தில் பெனால்டி கார்னர் மூலமாக முதல் கோலை அடித்தார் ஆஸி. வீரர் பிளாக் கோவர். அதன்பிறகு இந்திய அணி கொஞ்சம் கொஞ்சமாக வேகத்தைக் கூட்ட, விவேக் சாகர் பிரசாத் 42ஆவது நிமிடத்தில் கோல் அடித்து கோல்க்கணக்கை சமன்செய்தார்.
 

60 சதவீதம் ஆட்டம் இந்திய அணியின் வசம் இருந்ததால், போட்டி 1 - 1 என்ற கணக்கில் சமனிலேயே இருந்தது. 2016ஆம் ஆண்டு லண்டனில் நடைபெற்றதைப் போலவே பெனால்டி மூலமாக வெற்றி தீர்மானிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி ஆஸ்திரேலியாவின் ஆரன் ஜலேவ்ஸ்கி, டேனியல் பீலே மற்றும் ஜெரீமி எட்வர்ட்ஸ் ஆகியோர் கோல் அடித்தனர். ஆனால், இந்திய அணியின் மன்பிரீத் சிங்கைத் தவிர யாரும் கோல் அடிக்காமல் ஏமாற்றினர். இதன்மூலம் 3 - 1 என்ற கணக்கில் வெற்றிபெற்ற ஆஸ்திரேலிய அணி, கோப்பையை தக்கவைத்துக் கொண்டது. சுரேந்தர் கொடுத்த பாஸை தில்பிரீத் சிங் கோலாக மாற்றாமல் விட்டது முக்கியமான தருணமாக பார்க்கப்படுகிறது.