Published on 17/11/2021 | Edited on 17/11/2021

2021ஆம் ஆண்டின் உலகக்கோப்பை போட்டி நடந்து முடிந்த நிலையில், இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் இருபது ஓவர் கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது. இரு அணிகளும் மோதும் முதலாவது இருபது ஓவர் போட்டி இன்று நடைபெறுகிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய இருபது ஓவர் அணியின் புதிய கேப்டன் ரோகித் சர்மா, பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். இந்தப் போட்டியில் ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய வெங்கடேஷ் ஐயர் இந்திய அணியில் அறிமுகமாகிறார்.
இன்றைய போட்டியில் விளையாடும் இந்திய அணி வருமாறு ; ரோஹித் சர்மா, கே எல் ராகுல், சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த், வெங்கடேஷ் ஐயர், அக்சர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், புவனேஷ்வர் குமார், தீபக் சாஹர், முகமது சிராஜ்