Published on 14/12/2018 | Edited on 14/12/2018

இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று பெர்த்தில் தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் ஹாரிஸ் மற்றும் பின்ச் ஆகியோர் சிறப்பான தொடக்கமளித்தனர். இருவரும் அரைசதம் கடந்த நிலையில் 112 ரன்களுக்கு ஆஸ்திரேலிய அணி முதல் விக்கெட்டை இழந்தது. அதன் பிறகு நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் சீரான இடைவெளியில் தொடர்ந்து விக்கெட்டுகள் விழுந்தன. முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலியா அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 277 ரன்கள் சேர்த்துள்ளது. இந்தியா சார்பில் இஷாந்த் சர்மா, ஹனுமா விஹாரி தலா 2 விக்கெட்டுகளும், பும்ரா, உமேஷ் யாதவ் தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.