Skip to main content

தோனி படைத்த புதிய சாதனை!

Published on 03/10/2020 | Edited on 03/10/2020

 

dhoni

 

 

ஐபிஎல் போட்டிகளில் அதிக போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற புதிய சாதனையை தோனி படைத்துள்ளார்.

 

13-வது ஐபிஎல் தொடர் அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. தொடரின் 14-வது லீக் ஆட்டத்தில் சென்னை மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதின. இப்போட்டியில் சென்னை அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இதுவரை நான்கு போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி, ஒரு வெற்றி மற்றும் மூன்று தோல்விகள் பெற்று அணிகளுக்கான தரவரிசையில் கடைசி இடத்தில் உள்ளது. 

 

சென்னை அணியின் கேப்டனான தோனி, நேற்றைய போட்டியில் விளையாடியதன் மூலம் ஐபிஎல் தொடரில் அதிக போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற சாதனையை தன் வசப்படுத்தியுள்ளார். இந்த சாதனையானது இதற்கு முன்பு ரெய்னாவின் வசம் இருந்தது. தோனி இதுவரை மொத்தமாக 194 போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில் 164 போட்டிகள் சென்னை அணிக்காகவும், 30 போட்டிகள் புனே அணிக்காக விளையாடியதும் அடக்கம். தற்போது, அவருக்கு பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.