Published on 31/12/2021 | Edited on 31/12/2021

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், பிசிசிஐ தலைவருமான கங்குலிக்கு கரோனா பாதிப்பு உறுதியான நிலையில் அவர் கொல்கத்தாவில் உள்ள உட்லண்ட்ஸ் மருத்துவமனையில் கடந்த 27 ஆம் தேதி அனுமதிக்கபட்டார். அங்கு அவருக்கு மோனோக்ளோனல் ஆன்டிபாடி காக்டெய்ல் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்தநிலையில் தற்போது கங்குலி கரோனாவில் இருந்து குணமாகியுள்ளார். அதனைத்தொடர்ந்து அவர் தற்போது வீடு திரும்பியுள்ளார். கரோனாவிலிருந்து குணமடைந்திருந்தாலும் அடுத்த 14 நாட்களுக்கு கங்குலி, தன்னை வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ளவுள்ளார்.
கங்குலியின் மாதிரி சோதனை செய்யப்பட்டதில், அவருக்கு ஒமிக்ரான் பாதிப்பு ஏற்படவில்லை என கண்டறியப்பட்டதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.