Skip to main content

பிரெஞ்ச் ஓபன்: கிரெச்சிகோவா சாம்பியன்!

Published on 12/06/2021 | Edited on 12/06/2021

 

 

the french open tennis tournament

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸின் மகளிர் ஒற்றையர் பிரிவில் செக்குடியரசின் கிரெச்சிகோவா சாம்பியன் பட்டம் வென்றார். இறுதிப் போட்டியில் ரஷ்யாவின் பவ்லுசென்கோவாவை வென்று சாம்பியன் ஆனார் கிரெச்சிகோவா. இவர் ரஷ்ய வீராங்கனை பவ்லுசென்கோவாவை 6-1, 2-6, 6-4 என்ற செட் கணக்கில் வென்றுள்ளார்.

 

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸின் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டம் நாளை (13/06/2021) நடைபெறுகிறது. நாளை நடைபெறும் இறுதி ஆட்டத்தில் ஜோகோவிச்- சிட்சிபாஸ் பலப்பரீட்சை நடத்த உள்ளனர்.

 

அரையிறுதியில் செர்பியாவின் ஜோகோவிச் 3-6, 6-3, 7-6, 6-2 என்ற செட் கணக்கில் ரஃபேல் நடாலை வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

Next Story

18 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற டென்னிஸ் வீராங்கனை இரட்டை புற்றுநோயால் பாதிப்பு

Published on 04/01/2023 | Edited on 04/01/2023

 

18 Grand Slam winning tennis player with double cancer

 

டென்னிஸில் 18 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களைப் பெற்றவர் மார்டினா நவ்ரதிலோவா. தற்போது 66 வயதாகும் மார்டினா டென்னிஸ் போட்டிகளின் வர்ணனையாளராக இருந்து வருகிறார். இவருக்குத் தொண்டையில் ஏற்பட்ட பாதிப்பிற்காக மருத்துவ சிகிச்சை மேற்கொண்டார். மருத்துவ பரிசோதனையில் அவருக்கு ஆரம்பக்கட்ட புற்றுநோய் இருப்பது அடையாளம் காணப்பட்டது.

 

தொண்டையில் ஏற்பட்ட புற்றுநோய் பாதிப்பிற்காக சிகிச்சையினைத் துவங்கியபோது மார்பகத்திலும் புற்றுக் கட்டிகள் இருப்பது கண்டறியப்பட்டது. இது குறித்து மார்டினாவிற்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் கூறியதாவது, “மார்டினாவிற்கு கண்டறியப்பட்ட இரண்டு புற்றுநோய்க் கட்டிகளும் ஆரம்பக் கட்டத்தில் இருப்பதால் குணப்படுத்தக் கூடியதுதான் எனக் கூறியுள்ளனர். 

 

இந்நிலையில் இது குறித்து மார்டினா கூறுகையில், “இரண்டு புற்றுநோய்க் கட்டிகளும் ஆரம்பத்திலேயே கண்டறியப்பட்டுள்ளன. வலி தீவிரமானது என்றாலும் சிகிச்சை பெற்று குணமடைய முடியும் என நம்புகிறேன். இந்த நோயையும் எதிர்த்துப் போராடி வெற்றி பெறுவேன்” எனக் கூறியுள்ளார். 2010ல் மார்பகப் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து வெற்றிகரமாக மீண்டு வந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

 

Next Story

உலகம் முழுவதும் அனைத்து விளையாட்டுகளுக்கும் சோகமான தினம்

Published on 16/09/2022 | Edited on 16/09/2022

 

A sad day for all sports around the world

 

டென்னிஸ் நட்சத்திரம் ரோஜர் ஃபெடரர் தனது ஓய்வினை அறிவித்துள்ளார்.

 

ஓய்வு குறித்து தனது ட்விட்டர் பதிவில் கடந்த மூன்று ஆண்டுகளாக காயங்கள் மற்றும் அறுவை சிகிச்சை போன்றவற்றால் கடுமையான பாதிப்பிற்கு உள்ளானதாகவும் அதில் இருந்து மீண்டு வர கடுமையாக போராடியதாகவும் கூறியுள்ளார். இதன் காரணமாக 2022 லேவர் கோப்பையுடன் ஓய்வு பெற இருப்பதாகவும் கூறியுள்ளார்.

 

2003ம் ஆண்டு விம்பிள்டன் சாம்பியன் பட்டத்தை வென்ற பின் தற்போது வரை 6 ஆஸ்திரேலிய ஓபன் 8 விம்பிள்டன் 5 அமெரிக்க ஓபன் என மொத்தம் 20 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை ரோஜர் ஃபெடரர் வென்றுள்ளார்.

 

ரோஜர் ஃபெடரர் தனது ஓய்வினை அறிவித்ததற்கு ரஃபேல் நடால் தனது வருத்தத்தை ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார், அதில், “இந்த நாள் வரக்கூடாது என தான் விரும்பியதாகவும் இந்த நாள் எனக்கும் உலகம் முழுதும் உள்ள விளையாட்டுகள் அனைத்திற்கும் சோகமான நாள். களத்திற்கும் உள்ளேயும் வெளியேயும் பல அற்புதமான தருணங்களை உங்களுடன் பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி” என கூறியுள்ளார்.