Skip to main content

இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதல் கிரிக்கெட் போட்டி செப். 17-ல் தொடங்குகிறது

Published on 08/09/2017 | Edited on 08/09/2017
இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதல் கிரிக்கெட் போட்டி செப். 17-ல் தொடங்குகிறது

இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதல் கிரிக்கெட் போட்டி செப். 17-ல் தொடங்குகிறது. இந்த நிலையில் போட்டி அட்டவணை விவரம் இந்திய கிரிக்கெட் வாரிய இணையதளத்தில் வெளியாகியுள்ளது. இதன்படி இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் வருகிற 17-ந்தேதி பகல்-இரவு ஆட்டமாக நடைபெறுகிறது.

எஞ்சிய ஒரு நாள் போட்டிகள் கொல்கத்தா (செப்.21), இந்தூர் (செப்.24), பெங்களூரு (செப்.28), நாக்பூர் (அக்1) ஆகிய இடங்களில் நடக்கிறது. அதைத் தொடர்ந்து இவ்விரு அணிகள் இடையிலான மூன்று 20 ஓவர் போட்டிகள் முறையே ராஞ்சி (அக்.7), கவுகாத்தி (அக்.10), ஐதராபாத் (அக்.13) ஆகிய நகரங்களில் நடத்தப்படுகிறது.

சார்ந்த செய்திகள்