Skip to main content

"மேத்யூ ஹைடனைப் போல விளையாடுகிறார்" இந்திய இளம் வீரரைப் பாராட்டிய மோரிஸ்!

Published on 24/10/2020 | Edited on 24/10/2020

 

Chris Morris

 

தேவ்தத் படிக்கல் விளையாடும் விதம் மேத்யூ ஹைடனைப் போல உள்ளது என தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த ஆல்ரவுண்டர் கிறிஸ் மோரிஸ் தெரிவித்துள்ளார்.

 

தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த ஆல்ரவுண்டர் கிறிஸ் மோரிஸ், ஐ.பி.எல் தொடரில் பெங்களூரு அணிக்காக விளையாடி வருகிறார். 20 வயதே நிரம்பிய இந்திய இளம்வீரரான தேவ்தத் படிக்கலும் பெங்களூரு அணிக்காக விளையாடி வருகிறார். நடப்பு ஐ.பி.எல் தொடரில் 10 போட்டிகளில் களமிறங்கி 321 ரன்கள் எடுத்து, அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் தேவ்தத் படிக்கல், பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறார். இந்நிலையில், கிறிஸ் மோரிஸ் தேவ்தத் படிக்கல்லின் ஆட்டம் குறித்து வெகுவாகப் பாராட்டியுள்ளார்.

 

அதில் அவர், "ஆரோன் பின்ச்-உடன் இணைந்து தேவ்தத் படிக்கல் பேட்டிங் செய்தது வியக்கத்தக்க வகையில் இருந்தது. அவர் பேட்டிங் செய்வதைப் பார்க்கும் போது மேத்யூ ஹைடனைப் பார்ப்பது போல உள்ளது. உடலளவில் மேத்யூ ஹைடனைப் போல இல்லாவிட்டாலும், பந்தை எதிர்கொள்ளும் நுணுக்கம் அவரைப் போலவே உள்ளது. அவருக்குள் ஏதோ திறமை இருக்கிறது" எனக் கூறினார்.