கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன் 2015ம் ஆண்டிலேயே இந்திய கிரிக்கெட் அணியில் அறிமுகமானார். ஆனால் கடந்த 7 ஆண்டுகாளாக 16 டி20 போட்டிகளிலும் 11 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியில் சஞ்சு சாம்சனுக்கு அணி நிர்வாகம் தொடர்ந்து வாய்ப்பினை மறுத்து வருகிறது எனக் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில் அயர்லாந்து கிரிக்கெட் நிர்வாகம் சஞ்சு சாம்சனை தங்கள் நாட்டிற்காக விளையாட வருமாறு அழைப்பு விடுத்துள்ளது. அயர்லாந்து நாட்டின் குடியுரிமை, கார், வீட்டு வசதி இந்திய கிரிக்கெட் நிவாகம் வழங்கும் சம்பளத்திற்கு நிகராண ஊதியம் என அனைத்தையும் வழங்கி தங்கள் நாட்டிற்காக விளையாட அழைத்துள்ளது.
மேலும் அயர்லாந்தின் கேப்டனாக செயல்படும் வாய்ப்பும் வழங்கத் தயாராக உள்ளதாகத் தெரிவித்தது. ஆனால் சஞ்சு சாம்சன் இந்த வாய்ப்பை நிராகரித்துள்ளார். இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் தொடர்ந்து இந்திய கிரிக்கெட்டில் தான் கடைசி வரை இருப்பேன் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் பிசிசிஐ அனுமதி அளித்தால் வெளிநாடுகளில் நடக்கும் டி20 போட்டிகளில் கலந்து கொள்வேன் என்றும் கூறியுள்ளார்.
அணியின் கேப்டனாக செயல்பட வாய்ப்பு கிடைத்தும் சஞ்சு சாம்சன் அதை நிராகரித்தது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.