Skip to main content

மீண்டும் வெற்றிக்கனியை பறிக்குமா சி.எஸ்.கே. 2.0...?

Published on 19/03/2019 | Edited on 19/03/2019

இனி “சி.எஸ்.கே. சி.எஸ்.கே.” என்னும் மந்திரச் சொற்களும், “தோனி... தோனி...”, “ரெய்னா... ரெய்னா...” என்ற கோஷங்களும் மைதானங்களை ஆக்கிரமிக்கும். ரெய்னாவின் அதிரடி பேட்டிங், தோனியின் ஷாட்ஸ் மற்றும் கேப்டன்ஷிப், பிராவோவின் ஆல்-ரவுண்ட் ஸ்கில், டூ பிளசிஸ் மற்றும் ஜடேஜாவின் டைவ் பீல்டிங் என சிஎஸ்கே வீரர்களும் உற்சாகத்தின் மிகுதியில் உள்ள ரசிகர்களை இன்னும் அமர்களப்படுத்துவார்கள்.  

 

ipl

 

சிஎஸ்கே அணிக்கு உள்ள ஆதரவும், எதிர்பார்ப்பும் மற்ற உள்ளூர் டி20 அணிக்கும் இருக்குமா என்பது சந்தேகம்தான். அந்தளவுக்கு உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களை தன் பக்கம் வைத்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. சென்ற வருடம் வயது முக்கியமல்ல, பிட்னஸ் தான் முக்கியம் என்ற கொள்கையுடன் ஏலத்தில் ஆச்சரியம் கொடுத்து, களத்திலும் சாதித்து கோப்பையை வென்றது. 
 

வரும் 23-ம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் 12-வது ஐபிஎல் போட்டிகள்  தொடங்கவுள்ளன. இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் தீவிரமான சென்னை சேப்பாக்கத்தில் பயிற்சியில்  ஈடுபட்டு வருகின்றனர். பயிற்சியில் தல தோனி சிக்ஸர் அடிக்கும் ஷாட்களை சிஎஸ்கே அணி நிர்வாகம் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளது. 
 

ipl

 

சிஎஸ்கே 4-வது முறையாக கோப்பையை வெல்லும் நம்பிக்கையுடன் இருக்கிறது. சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங், பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹசி, பவுலிங் பயிற்சியாளர் பாலாஜி என பயிற்சியாளர் யூனிட்டும் பலம் பெற்றுள்ளது. 
 

மூன்று முறை சாம்பியன், நான்கு முறை இறுதிப்போட்டி என மிகச்சிறந்த அணியாக சிஎஸ்கே ஐ.பி.எல்.லில் உள்ளது. 2 வருட தடைக்கு பிறகு மாஸ் கம்பேக் தந்து கோப்பையை வென்றது. இந்த ஆண்டு ஏலத்தில் மோகித் சர்மா (5 கோடி), ருதுராஜ் கெய்க்வாட் (ரூ.20 லட்சம்) ஆகியோரை எடுத்தது. 
 

ipl

 

ரெய்னா, தோனி, முரளி விஜய், ராயுடு, கேதர் ஜாதவ், ஷேன் வாட்ஸன், சாம் பில்லிங்ஸ், டூ பிளசிஸ் என மிரட்டும் பேட்டிங் வரிசையை கொண்டுள்ளது. பேட்டிங்கை பொறுத்தவரை ஒப்பனிங், மிடில் ஆர்டர், லோவர் மிடில் ஆர்டர் என அனைத்தும் வலுவாக உள்ளது. மேலும் பல பேட்ஸ்மேன்கள் எந்த பொசிசனிலும் களமிறங்கி அசத்தும் திறமை உடையவர்கள்.   
 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் செல்லப்பிள்ளை ரெய்னா மற்றும் நட்சத்திர வீரர் பிராவோ சென்னை அணிக்கு பேட்டிங், பவுலிங், பீல்டிங் என மூன்றிலும் பங்களிக்க தயாராக உள்ளனர். ஸ்லிப் மற்றும் பாயிண்ட்டில் கேட்ச், லாங் பீல்டிங்கில் டைவ் கேட்ச், கிரவுண்ட் பீல்டிங் மூலம் ரன்களை தடுத்தல் என ரெய்னா, ஜடேஜா, பிராவோ, டூ பிளசிஸ் ஆகியோரின் பீல்டிங் யூனிட் பிரமிக்க வைக்கிறது.   

 

ipl

 

ரவிந்திர ஜடேஜா, கேதர் ஜாதவ், பிராவோ, ஷேன் வாட்ஸன், மிட்ஷெல் சான்ட்னர் ஆகிய ஆல்ரவுண்டர்கள் அணிக்கு பலம் சேர்க்கின்றனர். ஃபாஸ்ட் பவுலிங் பொறுத்தவரை லுங்கி இங்கிடி, ஷர்துல் தாக்கூர் மற்றும் மோகித் சர்மா ஆகியோரை தவிர பெரிதாக அனுபவம் உடைய பவுலர்கள் இல்லை. இம்ரான் தாஹிர், கரன் சர்மா, ஹர்பஜன் சிங் ஆகிய அனுபவம் வாய்ந்த ஸ்பின்னர்கள்  அணிக்கு கூடுதல் பலம். 
 

கடந்த ஆண்டு கேதர் ஜாதவ் முதல் போட்டியிலேயே காயம் காரணமாக தொடரிலிருந்து வெளியேறினார். மிட்ஷெல் சான்ட்னர் காயம் காரணமாக தொடருக்கு முன்பே விலகினார். இந்த முறை இருவரும் அணியில் இணைந்திருப்பது கூடுதல் பலம். 
 

டெத் பவுலிங்கில் இங்கிடி, பிராவோ தவிர யாரும் அனுபவம் வாய்ந்தவர்கள் இல்லை. மொத்தம் உள்ள 25 வீரர்களில் சிஎஸ்கே அணியில் 17 வீரர்கள் இந்திய வீரர்கள், 8 வெளிநாட்டு வீரர்கள் உள்ளனர்.      
   
 

சிஎஸ்கே 2.0 பலம்: 

    வலுவான இடைநிலை ஆட்டக்காரர்கள்

    மிரட்டலான சுழல் பந்துவீச்சு

    மீடியம் ஃபாஸ்ட் மற்றும் ஸ்பின் ஆல்ரவுண்டர்கள்
 

 

சிஎஸ்கே 2.0 பலவீனம்:

    அனுபவமில்லாத வேகப்பந்துவீச்சு துறை

    ஸ்பெஷலிஸ்ட் ஓப்பனர் இல்லாதது 

    டெத் பவுலிங் 

 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பட்டியல்:

தோனி(கேப்டன்), சுரேஷ் ரெய்னா, அம்பதி ராயுடு, கேதர் ஜாதவ், முரளி விஜய், ரவிந்திர ஜடேஜா, ஹர்பஜன் சிங், மோகித் சர்மா, பிராவோ, ஷேன் வாட்ஸன், டூ பிளசிஸ், சாம் பில்லிங்ஸ், இம்ரான் தாஹிர், மிட்ஷெல் சான்ட்னர், லுங்கி இங்கிடி, கரன் சர்மா, டேவிட் வில்லே, தீபக் சாஹர், ஷர்துல் தாக்கூர், ருதுராஜ் கெய்க்வாட், நாராயன் ஜெகதீஸன், கேஎம் ஆசிப், துருவ் ஷோரே, மோனு குமார், பிஷ்னோய்.

 

 

 

 

Next Story

தமன்னாவிற்கு சைபர் கிரைம் சம்மன்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
tamanna summoned by maharashtra cyber crime for ipl telecast issue

கடந்த 2023ஆம் ஆண்டு ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமையை வியாகாம் நிறுவனம் வாங்கியது. அதன்படி அந்நிறுவனத்தின் செயலியான ஜியோ சினிமா செயலியில் இலவசமாக ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்பி வந்தது. 2023 முதல் அடுத்த ஐந்தாண்டிற்கு ஐபில் தொடரின் டிஜிட்டல் உரிமையை வியாகாம் நிறுவனம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில் கடந்த ஆண்டு ஃபேர்பிளே என்கிற சூதாட்ட செயலியில் சட்டவிரோதமாக ஐபிஎல் போட்டிகள் நேரலையில் ஒளிபரப்பப்பட்டதாக கூறி வியாகாம் நிறுவனம் மகாராஷ்ட்ரா சைபர் கிரைமில் புகார் அளித்தது. அந்த புகாரில், ஃபேர்பிளே செயலில் ஐபிஎல் போட்டிகள் ஒளிபரப்பப்பட்டதால் தங்கள் நிறுவனத்துக்கு ரூ.100 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டதாக குறிப்பிட்டிருந்தது. இந்த புகார் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார், ஃபேர்பிளே செயலியின் ஊழியர் ஒருவரை கைது செய்தனர். மேலும் அச்செயலியை விளம்பரப்படுத்திய பிரபலங்களை விசாரணை செய்ய முடிவெடுத்தனர். அந்த வகையில் பாலிவுட் நட்சத்திரங்கள் பாட்ஷா, சஞ்சய் தத், ஜாக்குலின் பெர்னாண்டஸ், தமன்னா உள்ளிட்ட பலர் விசாரணைக்கு அழைக்கப்பட்டனர்.  

கடந்த 23 ஆம் தேதி சஞ்சய் தத்துக்கு சைபர் கிரைம் போலீசார் விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பினர். ஆனால், தான் இந்தியாவில் இல்லாத காரணத்தால் தன்னால் ஆஜராக முடியவில்லை என சஞ்சய் தத் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தற்போது தமன்னாவிற்கு வருகிற 29ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி சைபர் கிரைம் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். 

Next Story

சென்னைக்கு மீண்டும் தோல்வி; தனி ஒருவனாக வெற்றியைத் தேடித்தந்த ஸ்டாய்னிஸ்!

Published on 23/04/2024 | Edited on 24/04/2024
Chennai super kings again lost to Lucknow team

ஐபிஎல் 2024இன் 39 ஆவது லீக் ஆட்டம் சென்னை மற்றும் லக்னோ அணிகளுக்கிடையே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. முதலில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்க ஆட்டக்காரர்களாக ருத்ராஜ் கெய்க்வாட் மற்றும் ரகானேவும் களமிறங்கினர். தொடக்கத்திலேயே ரகானே 1 ரன்னில் ஆட்டம் இழந்தார். அவரை தொடர்ந்து வந்த டாரியல் மிட்செல் 11 ரன்களும் ஜடேஜா 17 ரன்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர். அதனைத் தொடர்ந்து களமிறங்கிய சிவம் துபே 27 பந்துகளில் 66 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ருதுராஜ் 60 பந்துகளில் 108 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். இறுதியாக 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 210 ரன்களை சென்னை அணியினர் எடுத்தனர்.

211 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது லக்னோ அணி. லக்னோ அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக குவிண்டன் டி காக்கும், கே.எல்.ராகுலும் களமிறங்கினர். 3 பந்துகளில் ரன் எடுக்காமல் குவிண்டன் டி காக் ஆட்டம் இழக்க, அவரைத் தொடர்ந்து மார்கஸ் ஸ்டாய்னிஸ் களமிறங்கினார். அவர் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில் மறுமுனையில் 14 பந்துகளில் 16 ரன்கள் எடுத்து கே.எல்.ராகுல் ஆட்டம் இழந்தார்.

அவரைத் தொடர்ந்து வந்த படிக்கல் 19 பந்துகளில் 13 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். பின்னர் களமிறங்கிய நிக்கோலஸ் பூரன் 19 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். மறுமுனையில் நின்று அபாரமாக, ஆடி 63 பந்துகளில் 124 ரன்கள் எடுத்து ஸ்டாய்னிஸ் லக்னோ அணியை வெற்றி பெறச் செய்தார். லக்னோ அணி இறுதியாக 4 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்கள் எடுத்து வெற்றியைத் தனதாக்கிக்கொண்டனர். கடந்த போட்டியிலும் லக்னோ அணி சென்னை அணியை தோற்கடித்த நிலையில் தற்போது இரண்டாவது முறையாகவும் சென்னை அணியை லக்னோ அணி தோற்கடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.