Skip to main content

பிரிக்க முடியாதது : பும்ராவும் நோ-பால் விக்கெட்டும்!

Published on 30/08/2018 | Edited on 30/08/2018

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ராவையும், நோ-பால் மூலம் விழும் விக்கெட்டும் பிரிக்கவே முடியாது என பலரும் கிண்டலடிக்கத் தொடங்கியுள்ளனர். 
 

bumra

 

 

 

இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், முதல் இன்னிங்ஸில் இந்திய அணி பந்துவீசி வருகிறது. வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா தனது இரண்டாவது ஓவரின் முதல் பந்திலேயே, தொடக்க வீரர் ஜென்னிங்ஸ் விக்கெட்டை வீழ்த்தினார். அதற்கடுத்த ஓவரில் கேப்டன் ஜோ ரூட்டிற்கு பந்துவீசிய பும்ரா, மூன்றாவது பந்தில் எல்.பி.டபிள்யூ. ஆக்கினார்.
 

 

 

ஆனால், நடுவர்கள் இதை விக்கெட்டாக ஏற்க முடியாது என மறுத்தனர். டி.ஆர்.எஸ். மூலமாக ரிவியூ கேட்டபோதுதான், பும்ரா நோ-பால் வீசியது தெரியவந்தது. மிகமுக்கியமான விக்கெட்டை வீழ்த்தியிருந்தாலும், நோ-பால் வீசியதால் அது கைநழுவிப் போனது பலரையும் அதிருப்தியில் ஆழ்த்தியது. முக்கியமான தருணங்களில் இதுபோன்ற நோ-பால்களை தொடர்ந்து வீசிக் கொண்டிருக்கும் பும்ராவை, நெட்டிசன்களும் சும்மா விட்டுவைக்கவில்லை. பும்ராவையும், நோ-பாலையும் ஒருக்காலமும் பிரிக்கமுடியாது என கருத்து பதிவிட்டு வருகின்றனர். சாம்பியன்ஸ் ட்ராஃபி கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில், பும்ரா முக்கியமான கட்டத்தில் விக்கெட் எடுத்து, அது நோ-பால் என்பதால் நிராகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கிரிக்கெட் விமர்சகர் ஹர்ஷா போக்லே, “இளம் வீரர்களில் முக்கியமான பங்கை வகிப்பவர் ஜஸ்பிரீத் பும்ரா. ஆனால், அத்தியாவசியமான தருணங்களில் நோ-பால் வீசி, தன் பெயரைக் கெடுத்துக் கொள்கிறார்” என தெரிவித்துள்ளார்.