இந்தியா இலங்கை இடையே இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி!
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, அங்கு 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை விளையாடி வருகிறது. இதில் முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
இந்நிலையில், இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இலங்கையின் பல்லிக்கேல் மைதானத்தில் மதியம் 2.30 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங்கைத் தேர்வு செய்தது. ஆட்டம் தொடங்கி 8-ஆவது ஓவரில் இலங்கையின் அணியின் திக்வெல்லா 31 ரன்களில் ஆட்டமிழந்தார். 11 ஓவர்கள் முடிந்துள்ள நிலையில் இலங்கை அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 56 ரன்கள் எடுத்து தொடர்ந்து விளையாடி வருகிறது.
ஏற்கெனவே, டெஸ்ட் தொடரில் படுதோல்வி அடைந்துள்ள இலங்கை அணி, ஒருநாள் போட்டிகளின் முதல் ஆட்டத்திலும் தோல்வி அடைந்துள்ளது. எனவே, இன்றைய ஆட்டத்தை வெல்லும் முனைப்போடு எதிர்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.