Skip to main content

பாகிஸ்தானுக்கு எதிரான உலகக்கோப்பை போட்டி; பிசிசிஐ முக்கிய அறிவிப்பு...

Published on 22/02/2019 | Edited on 22/02/2019

 

gdfgdfg

 

பாகிஸ்தானுடன் கிரிக்கெட் விளையாடுவது பற்றி மத்திய அரசுடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று பி.சி.சி.ஐ. நிர்வாகக் குழு உறுப்பினர் ராய் கூறியுள்ளார். புல்வாமா தாக்குதலால் பாகிஸ்தானுடன் கிரிக்கெட் விளையாட பிசிசிஐ மறுப்பு தெரிவித்தது. இந்நிலையில் இன்று நடைபெற்ற பி.சி.சி.ஐ. கூட்டத்துக்கு பிறகு பேசிய ராய், உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுடன் இந்திய அணி விளையாடுமா இல்லையா என்பது குறித்து மத்திய அரசுடன் பேசி முடிவுகள் எடுக்கப்படும். அப்படி எடுக்கப்பட்ட முடிவுகள் ஐ.சி.சி க்கு எழுத்துப்பூர்வமாக அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.