தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக கேப்டவுனில் கடந்த மார்ச் மாதம் நடந்த டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், ஆஸ்திரேலிய வீரர் கேமரூன் பான்கிராப்ட் பந்தை தேய்த்து அதன் தன்மையை மாற்ற முயற்சித்த போது சிக்கினார். இதற்கு ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக இருந்த ஸ்டீவன் சுமித், துணை கேப்டன் டேவிட் வார்னர் ஆகியோர் உடந்தையாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள் இருவருக்கும் ஓராண்டும், பான்கிராப்டுக்கு 9 மாதங்களும் விளையாட ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தடை விதித்தது. இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பான்கிராப்ட் இது பற்றி கூறும்போது 'வார்னர் தான் தன்னை அவ்வாறு செய்யச்சொன்னதாகவும், இது அவரின் யோசனை தான்' எனவும் கூறிருந்தனர்.
மேலும் இது குறித்து அவர், 'போட்டியில் நாங்கள் இருந்த சூழ்நிலையை வைத்து பந்தை சேதப்படுத்தும் யோசனையை வழங்கியது டேவிட் வார்னர் தான். இதற்கு நான் தான் பொருத்தமாக இருப்பேன் என்று முடிவு செய்த அவர், சொல்லும் நேரத்தில் அதை செய்ய வேண்டும் எனவும் கூறினார். அதற்கு மேல் எனக்கு வேறு எதுவும் தெரியாது. அணியில் எனக்கு இருந்த மதிப்பின் அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவாக இது அமைந்தது. நானும் மூத்த வீரர்கள் என் மீது வைத்த நம்பிக்கையை காப்பாற்ற வேண்டி இருந்தது. ஆனால் அதை செய்தால் மிகப்பெரிய விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று உணர்ந்திருந்தேன்' என கூறினார்.