Skip to main content

கோமாவில் இருக்கும் பிரபல இந்தியக் குத்துச்சண்டை வீராங்கனை மருத்துவமனையிலிருந்து வெளியேற்றம்...

Published on 02/04/2020 | Edited on 02/04/2020


கரோனா சிகிச்சைக்காக மருத்துவமனையைத் தயார் செய்வதற்காக நாகாலாந்தில் உள்ள மருத்துவமனையில்  கோமாவில் இருந்த இந்திய குத்துச்சண்டை வீராங்கனை வெளியேற்றப்பட்டுள்ளார்.

 

Aneile Kenye disharged from nagaland hospital

 

 

உலகளவில் கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒன்பது லட்சத்தைக் கடந்துள்ளது. மேலும், உலகளவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 1.9 லட்சத்திற்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர், 47,000க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.இந்தியாவில் இந்த வைரசால் 1998 பேர் பாதிக்கப்பட்டுள்ள சூழலில்,உயிரிழந்தோரின் எண்ணிக்கை 58 ஆக உயர்ந்துள்ளது.அதேபோல, இந்த வைரஸ் தாக்கத்திலிருந்து குணமடைந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 148 ஆக உயர்ந்துள்ளது.இந்நிலையில் கரோனா சிகிச்சைக்காக மருத்துவமனையைத் தயார்ப்படுத்தும் நோக்கில்,தங்களது மருத்துவமனையில் 11 ஆண்டுகாலமாகச் சிகிச்சை பெற்று வந்த இந்தியக் குத்துச்சண்டை வீராங்கனை அனீல் கென்யேவை வெளியேற்றியுள்ளது நாகாலாந்து மருத்துவமனை நிர்வாகம்.

நாகாலாந்தைச் சேர்ந்த இந்திய குத்துச்சண்டை வீராங்கனையான அனீல் கென்யே 2008ல் சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் சார்பாகக் கலந்துகொண்டவர். மூளையில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாகக் கடந்த 11 ஆண்டுகளாக கோமாவில் உள்ள இவர் நாகாலாந்து மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.இந்நிலையில், நாடு முழுவதும் கரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்கும் வகையில் மருத்துவமனைகள் மாற்றியமைக்கப்பட்டு வருகின்றன.இதன் காரணமாக அனீல் கென்யேவை மருத்துவமனையிலிருந்து வெளியேற்றியுள்ளது மருத்துவமனை நிர்வாகம்.இதனையடுத்து, அனீல் கென்யேவை தொடர் கண்காணிப்பில் வைக்கவேண்டும் என்பதற்காக மருத்துவமனைக்கு அருகிலேயே வாடகை வீடு ஒன்றில் மருத்துவ வசதிகளோடு அறை ஒன்றைத் தயார் செய்து வருகிறார் அவரது கணவர்.