உலகக்கோப்பையில் இன்றைய ஆட்டத்தில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அணிகள் மோதி வருகின்றன. இதில் போட்டியின் நடுவே பலோசிஸ்தான் குறித்து வானில் பலூன் பறக்க விடப்பட்டது. இதனால் கோபமடைந்த இரு நாட்டு ரசிகர்களும் மைதானத்திலேயே சண்டையிட்டுக்கொண்டனர்.
பாகிஸ்தானில் உள்ள பலோசிஸ்தான் மாகாணம் யாருக்கு சொந்தம் என்பது குறித்து நீண்ட காலமாக பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் இடையே சண்டை நடந்து வருகிறது. இந்த நிலையில் இன்றைய ஆட்டத்தில் "justice for balochistan" என்று எழுதப்பட்ட ராட்சத பலூன் விமானம் மூலம் பறக்கவிடப்பட்டது. இதனை கண்ட இரு நாட்டு ரசிகர்களும் கோபமடைந்து, மாறி மாறி திட்டிக்கொண்டனர்.
பின்னர் அங்கிருந்த இருநாட்டு ரசிகர்களும் கையில் கிடைத்த பொருட்களை எல்லாம் எடுத்து ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதனால் அந்த மைதானத்தை சுற்றி பரபரப்பு நிலவி வருகிறது. இந்த தனியார் விமானம் எங்கிருந்து வந்தது என்பது குறித்து தெரியவில்லை. மேலும் அந்த விமானம் அனுமதி வாங்காமலே அங்கு பிறந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Afghanistan fans beating a supporter of Pakistan cricket team outside the cricket stadium in Leeds. ?
— Danyal Gilani (@DanyalGilani) June 29, 2019
#PAKvAFG #CWC19
Via: Azhar Javed pic.twitter.com/ZTlGNW5Tz5